இப்படி விளையாடுனா பௌலர்கள் என்ன செய்வாங்க.. சாம்சன் கடைசி வரை இருந்திருந்தால் ஆட்டமே வேற – இர்பான் பதான் பேச்சு.
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது நாடுகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த முறை ராஜஸ்தான் அணியானது மற்ற அணிகளை காட்டிலும் ஒரு பலமான அணியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று ராஜஸ்தானை அணியும் டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸை வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடி
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது நாடுகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த முறை ராஜஸ்தான் அணியானது மற்ற அணிகளை காட்டிலும் ஒரு பலமான அணியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று ராஜஸ்தானை அணியும் டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸை வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்ய இதனை சரியாக பயன்படுத்தி கொண்ட டெல்லி அணி அற்புதமாக விளையாடி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களை அடித்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கத்திலேயே ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்க அதன் பின்னர் வந்த அதிரடியா விளையாடினார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் 4 விக்கெட்டுகளை இழந்து பலமாக நின்ற நேரத்தில் திடீரென சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். இதன் போது அவர் 46 பந்துகளில் 86 ரன்களை முடித்திருந்தார். சஞ்சு விக்கெட்டிற்கு பிற்காடு ராஜஸ்தான் அணிக்கு விக்கெட்டுகள் விழுக 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது ராஜஸ்தான் அணி.
இந்நிலையில் இந்த போட்டியில் அற்புதமாக விளையாடிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் குறித்து முன்னாள் வீரர் இர்பான் பதான் பேசுகையில் : அவர் லாங்-ஆஃப், லாங்-ஆன் அல்லது மிட்விக்கெட் என முன்னால் பெரிய ஷாட்களை ஆடுகிறார். மேலும் ஸ்கொராயர் விக்கெட்டில் இருந்தும் சஞ்சு சாம்சன் ரன்களை அடிப்பதையும் நீங்கள் பார்க்கலாம். அவர் லாப் ஷாட்களை விளையாடுவதில்லை, ஆனால் மைதானத்தின் நான்கு திசைகளிலும் சரியான கிரிக்கெட் ஷாட்கள் மூலம் ரன்களை அடித்தார்.
கலீல் அகமது ஒரு சரியான யார்க்கரை வீசினார், அவர் ஒரு பந்துவீச்சாளராக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார், ஆனால் சாம்சன் அதை ஒரு பவுண்டரிக்கு அடித்தார். இந்த நிலையில் ஒரு பந்து வீச்சாளர்கள் என்ன செய்ய முடியும்? சஞ்சு அந்த மாதிரியான பார்மில் இருக்கிறார். அவர் பந்துவீச்சாளர்களை முற்றிலும் ஆயுதமற்றவர்களாக ஆக்குகிறார். பந்து வீச்சாளர்களின் மன உறுதியை இழக்கச் செய்கிறார்.
சஞ்சு சாம்சன் அப்படி பேட்டிங் செய்வதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒருவேளை சாம்சன் அவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் போட்டியில் வென்றிருப்பார். வேகப்பந்து வீச்சாளர்களோ அல்லது சுழற்பந்து வீச்சாளர்களோ அவருக்கு எதிராக திறம்பட செயல்படவில்லை. மேலும் அவர் பின் காலால் எளிதாக சிக்ஸர்களை அடித்தார். அவர் தரையோடு விளையாடி தேவையான நேரத்தில் பவுண்டரிகளை அடித்தார்.
அவர் முன்னும் பின்னும் ஆரம்ப இயக்கத்தைக் கொண்டிருக்கிறார் அல்லது சற்று முன்னோக்கி வருகிறார். அவர் பந்துவீச்சாளர்களின் நீளம் மற்றும் அவர்கள் என்ன பந்து வீசப் போகிறார்கள் என்பதை முன்னரே கணித்தது விளையாடினார். இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் நம்பமுடியாத அளவிற்கு நன்றாக பேட்டிங் செய்தார் என்றார் இர்பான் பதான்.