சென்னை அணிக்கு தோனி எப்படியோ அப்படித்தான் ரோகித் சர்மாவும் – இர்பான் பதான் அதிரடி
சென்னை அணியில் தோனி எப்படியோ அதே போல் தான் ரோஹித் ஷர்மாவும் மும்பை அணியில் என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார். உலகெங்கும் நடைபெறும் லீக் போட்டிகளில் முக்கியமானது மட்டும் முதன்மையான லீக் போட்டிகளில் ஒன்று அது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி தான். இது கடந்த
சென்னை அணியில் தோனி எப்படியோ அதே போல் தான் ரோஹித் ஷர்மாவும் மும்பை அணியில் என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார். உலகெங்கும் நடைபெறும் லீக் போட்டிகளில் முக்கியமானது மட்டும் முதன்மையான லீக் போட்டிகளில் ஒன்று அது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி தான். இது கடந்த 16 வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் விளையாடுவதற்கு விருப்பமாக இருப்பார்கள்.
இது வணிக ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் விளையாடும் விளையாட்டு ஆகும். இந்த லீக் தொடரிலிருந்து முக்கிய அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். அவர் 2013 ஆம் ஆண்டு கேப்டன் பதவி ஏற்ற பின் 2015, 17, 19 மற்றும் 20 ஆண்டுகளில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மும்பை அணியானது டிரேடிங் மூலம் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் எடுத்தது.
இது மும்பை அணி ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு பிறகு அவரை கேப்டன் சியில்ல் அமர வைப்பதற்கான திட்டம் என்று பலர் கூறி வந்தனர். ஆனால் தற்போது மும்பை அணி ரோஹித் ஷரம்வை கேப்டன் பதவியில் இருந்து விலகி ஹர்திக்பாண்டியாவை கேப்டன் ஷிப் பதவியை கொடுத்துள்ளது. ரோஹித் சாரமா கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பாகவே மும்பை அணி நிர்வாகம் தற்பொழுது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. கேப்டன் பகுதியில் ஹர்திக் பாண்டியாவிற்கு வழங்கி உள்ளது.
இந்த நிலையில் தான் ரோஹித் ஷர்மா குறித்து பேசிய முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறுகையில் “மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மாவின் அந்தஸ்து சிஎஸ்கேயில் தோனியின் அந்தஸ்துக்கு நிகரானதாகும். ரோஹித் சர்மா கேப்டனாக தன்னுடைய ரத்தம் மற்றும் வியர்வையுடன் மும்பை இந்தியஸ்னஸ் அணியை கட்டமைத்துள்ளார்.
அவர் மும்பை அணிக்காக நிறைய பங்களித்துள்ளார். அவர் ஒரு அற்புதமான கேப்டன் பந்துவீச்சாளர்களின் கேப்டன். கடந்த ஆண்டு ஜோஃப்ரா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் பார்மில் இல்லாத போதும் நல்ல சீசனாக ரோஹித் சர்மாவுக்கு இருந்தது.
மேலும் ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய அவர் கூறுகையில் “இந்த ஐபிஎல் சீசனில் சர்வதேச அளவில் வீரர்களளாகவும் தலைமையும் ஆற்றிய பும்ரா , ரோஹித் மற்றும் சூரிய குமார் யாதவ் ஆகியோர் இருப்பதால்எ அவர்களை வழிநடத்துவது என்பது ஹர்திக் பாண்டியாவிற்கு ஒரு சவாலான பணியாக இருக்கும். முடிவு எப்போதுமே மும்பை இந்தியன்ஸ் மற்றும ஹர்திக் பந்தியாவின் கையில் உள்ளது. ஹர்திக்கிற்கு இது எளிதாக இருக்காது என்றார் என்று இர்பான் பதான்.