“ஹர்திக் பாண்டியா மும்பை அணியில் இணைந்தது மும்பை அணிக்கு எந்த ஒரு பயனும் இல்லை” – இர்பான் பதான்.

ஐபிஎல் 2024 தொடருக்கு முன்பாக குஜராத் மற்றும் மும்பை அணிகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்துள்ளது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளனர். ஐபிஎல்2022-ல் இருந்து குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா

By ·

ஐபிஎல் 2024 தொடருக்கு முன்பாக குஜராத் மற்றும் மும்பை அணிகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்துள்ளது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளனர். ஐபிஎல்2022-ல் இருந்து குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்து வருகிறார். இவர் கேப்டனாக பதவி வகித்த முதல் போட்டியிலேயே கோப்பையை குஜராத் அணிக்கு பெற்று தந்தார்.

ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி வரை சென்று சென்னை சென்னை அணியிடம் தோல்வியை தழுவி இரண்டாவது இடத்தை பிடித்தார். ஐபிஎல் வரலாற்றில் கோப்பை வென்ற ஒரு அணியின் கேப்டனை மற்ற அணிக்கு வர வைப்பதற்காக பேரம் பேசி இருப்பது இதுதான் முதல் முறையாகும். குஜராத் அணி 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தான் அந்த அணி அறிமுகமானது அப்போது அந்த அணியின் ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியின் கேப்டனாக நியமித்தது. இதற்கு முன்பாக அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல் ரவுண்டராக விளையாடி வந்தார்.

அவருக்கு காயம் ஏற்படவே அவரால் மும்பை இந்தியன்ஸ் அணியில் சரியாக விளையாட முடியவில்லை. அதன்பின் காயம் சரியான பின் அவர் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் 2023 ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று பலம் வாய்ந்த அணி என்று அவர் நிரூபித்துக் கொண்டிருந்தார். இப்படி ஒரு சிறப்பான கேப்டனாக இருந்த போதும் மும்பை இந்தியன்ஸ் அவரை வாங்குவதற்காக குஜராத் அணியிடம் பேரம் பேசி உள்ளது.

குஜராத் அணியும் அவரை மும்பை அணிக்கு அனுப்பி விடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக மும்பை அணி யாரையும் குஜராத் அணிக்கு அனுப்பவில்லை. மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை வாங்கி உள்ளனர். இது குறித்து பேசிய முன்னாள் இந்திய அணியின் வீரர் இர்பான் பதான் காட்டமாக பதில் அளித்து இருந்தார். அவர் மும்பை அணிக்கு சென்றது மும்பை அணிக்கு ஒரு பயனும் இல்லை என்றும் அவர் கூறி இருந்தார். இது குறித்து மேலும் பேசிய அவர்

ஒரு கேப்டனாக இருந்து தற்போது மும்பை அணியின் வீரராக மாறி உள்ள ஹர்திக் பாண்டியா அவருக்கு கேப்டன் பதவி அளிக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்து இர்பான் பதான் அது எல்லாம் நடக்காது என்றும் கூறி இருந்தார். மேலும் கூறிய அவர் எதிர்காலத்தில் வேண்டும் ஆனால் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஆகலாம். ஆனால் தற்போது ஹர்திக் பாண்டியா அணிக்கு எந்த ஒரு லாபமும் இல்லை.

மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா ஒரு மலையாக இருந்து வருகிறார். அந்த அணிக்கு ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். அவர் அந்த அணியில் இருக்கும் வரை அவர் தான் மும்பை அணியின் கேப்டனாக இருக்க முடியும். ஹர்திக் பாண்டியா அவர் இருக்கும் வரை கேப்டன் ஆக முடியாது அதற்க்கு பின் வேண்டுமானாலும் அவர் கேப்டன் ஆக முடியும் என்று அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை