“இது தான் சிறப்பான பதில்” கம்பீர் ஸ்ரீ சாந்த் சர்ச்சைக்கு கம்பீருக்கு பதில் அளித்த இர்பான் பதான்.
தற்போது இந்தியாவில் நடைபெறும் லெஜன்ட் போட்டிகளில் இந்திய அணியில் இருந்து ஒய்வு பெற்ற முன்னாள் மூத்த வீரர்கள் தற்போது லெஜென்ட் லீக்கில் விளையாடிக் கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் நேற்று இந்திய கேப்பிடல்ஸ் அணி மற்றும் குஜராத் டைடன்ஸ் அணியும் நாக் அவுட் சுற்றில் நேற்று மோதின. அத
தற்போது இந்தியாவில் நடைபெறும் லெஜன்ட் போட்டிகளில் இந்திய அணியில் இருந்து ஒய்வு பெற்ற முன்னாள் மூத்த வீரர்கள் தற்போது லெஜென்ட் லீக்கில் விளையாடிக் கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் நேற்று இந்திய கேப்பிடல்ஸ் அணி மற்றும் குஜராத் டைடன்ஸ் அணியும் நாக் அவுட் சுற்றில் நேற்று மோதின. அதில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக கௌதம் கம்பீரம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரீஷாந்த் செயல்பட்டனர்.
அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கௌதம் கம்பீரின் தலைமையிலான இந்திய கேப்பிட்டல்ஸ் அணி 20 அவர்கள் முடிவில் 223 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகள் இழந்து இருந்தது. 224 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 அவர்கள் முடிவில் 211 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே இந்திய கேப்பிடல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் 12 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் ஸ்ரீசாந்த் மட்டும் கௌதம் கம்பீர் ஆகிய இருவரும் மைதானத்தில் வார்த்தைகளால் சண்டையிட்டுக் கொண்டனர். போட்டியின் இரண்டாவது ஓவரில் ஸ்ரீசாந்த் வீசிய பந்து கௌதம் கம்பீர் அடித்து நொறுக்கினார் அதனை தொடர்ந்து ஸ்ரீ சாந்த் வித்தியாசமான முறையில் அவர் பந்து வீசி இருந்தனர். அதனை அவர் அற்புதமாக அடித்து இரண்டு ரன்களை எடுக்க ஓடினார். அதன்பின் ஸ்ரீ சாந்த் பேட்ஸ்மேனை பார்த்து ஏதோ ஒன்று பேசி அவர்களை தூண்டிவிடுவது போல பேசியுள்ளார். அதற்கு பதில் அளித்த கௌதம் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவர் ஸ்ரீசாந்த் மற்றும் அவரது குடும்பம் குறித்து மிகவும் மோசமாகவும் ஸ்ரீசாந்த் உடைய மாநிலம் குறித்தும் ஆபாசமாக பேசியதாக ஸ்ரீசாந்த் தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில் இங்கே என் மீது எந்த ஒரு தவறும் கிடையாது. விரைவில் அது குறித்து உங்களுக்கு தெரியும். கம்பீரோடு என்ன நடந்தது என்பது அவர் பேசியது என்ன நடந்தது என்று விரைவில் நான் உங்களுக்கு தெரிவிப்பேன். அவர் மூத்த வீரர்களான சேவாக் பாய் போன்ற மூத்த வீரர்களையும் அவர் மதிப்பது கிடையாது. அதே போல் தான் என்றும் என்னிடம் நடந்து கொண்டுள்ளார். அவர் என்னை மிகவும் திட்டியிருந்தார். கம்பீர அது போன்ற செயல்பட்டு இருக்க கூடாது.
அவர் பேசியபோது என் மாநிலம் குடும்பம் என எல்லாவற்றையும் குறித்தும் அவர் பேசியிருந்தார் அவர் சொல்லக்கூடாது விஷயத்தை எல்லாம் மைதானத்தில் அங்கு சொல்லியிருந்தார். அவர் என்ன சொன்னார் என்று சொன்னார் உங்களுக்கு நிச்சயம் தெரிவிப்பேன். உங்களால் மைதானத்தில் விளையாடும் சக வீரர்களை மதிக்க முடியவில்லை என்றால் நீங்கள் மக்கள் பிரதிநியாக இருந்து என்ன பயன்? தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் நிகழ்சிகளில் கூட விராட் கோலி பற்றி கேட்டால் கூட அவர் பேசுவதில்லை. அங்கு அவர் வேறு ஏதாவது தான் அவர் பேசுவார். நான் இருக்கும் போது பற்றி விரிவாக பேச விரும்பவில்லை இதனால் மிகவும் புண்பட்டு இருக்கின்றேன் என்றும் ஸ்ரீசாந்த் வீடியோ வெளியிட்டு இருக்கின்றார்.
Smile is the best Answer brother.
— Irfan Pathan (@IrfanPathan) December 7, 2023
அதன் பின் கவுதம் கம்பீர் இதற்க்கு ஒரு பதிலடி ஒன்று தந்து இருந்தார். அதில் அவர் உலகம் முழுவதும் கவனம் செலுத்தும் போது புன்னகையுடன் இருங்கள் என்பது போல் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு ஒன்றை அளித்து இருந்தார். இதற்க்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறுகையில் சிறப்பு தான் அனைத்திற்கும் சிறப்பான பதில் என்றும் அவர் கூறி இருந்தார்.இர்பான் பதான் கம்பீர் மற்றும் ஸ்ரீ சாந்த் இந்திய அணி 2007 டி20 உலககோப்பையின் போது தோனி தலைமையின் கீழ் இவர் விளையாடினார்கள் என்பதும் குறிப்பிடதக்கது.