மும்பை அணியில் இருந்து விலகி சென்னை அணியில் இணைய போகிறாரா பும்ரா? இது தான் காரணமா? அவரே செய்த செயல்.

மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்ப்ரிட் பும்ரா மும்பை அணியில் இருந்து வெளியேறும் முடிவில் இருக்கின்றார் என தகவல் வெளியாகி உள்ளது. பும்ரா இன்று அவர் instagram பக்கத்தில் மும்பை அணியை பின் தொடர்வது நிறுத்திவிட்டு மேலும் சென்னை அணியின் கேப்டனின் தோனியின் தற்போது பின்தொடர்ந்து

By ·

மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்ப்ரிட் பும்ரா மும்பை அணியில் இருந்து வெளியேறும் முடிவில் இருக்கின்றார் என தகவல் வெளியாகி உள்ளது. பும்ரா இன்று அவர் instagram பக்கத்தில் மும்பை அணியை பின் தொடர்வது நிறுத்திவிட்டு மேலும் சென்னை அணியின் கேப்டனின் தோனியின் தற்போது பின்தொடர்ந்து வருகிறார் என பும்ரா சென்னை அணியில் இணைய உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் பும்ரா இன்று தனது instagram பக்கத்தில் மௌனமே சிறந்த பதில் என்று அவர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தால் இதனை தொடர்ந்து ரசிகர்கள் பும்ரா இந்த பதிவின் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்று பேச்சில் ஈடுபட்ட போது தான் இந்த விஷயம் வெளியே வந்தது. சில ரசிகர்கள் இந்திய அணி இறுதிப் போட்டி தோல்வி குறித்த அவர் பதிவேற்றி உள்ளார் என்று கூறி வந்தாலும் மற்ற சில ரசிகர்கள் அவர் மும்பை இந்தியன்ஸ் ஹர்திக் பாண்டியா இணைந்தது பிடிக்காமல் தான் அவர் இவ்வாறு செய்கிறார் என்று கூறி வருகிறார்கள்.

இதற்கான காரணம் என்னவென்றால் ஆராய்ந்து பார்த்தால் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பும்ரா சிறப்பாக இந்திய அணியை வழி நடத்தி இருந்தார். அப்போது இந்திய அணி வழி நடத்த பும்ரா தான் சரியான நபர் என்று பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அது மட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தவில்லை எனவே ஹர்திக் பாண்டியாவை விட பும்ரா தான் சிறந்த கேப்டன் என்று அப்போது தகவல்கள் வெளியாகி இருந்தது.

எனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மாவிற்கு பிறகு பும்ரா தான் கேப்டனாக இருக்க வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டுள்ள நிலையில் குஜராத் அணியில் இருந்து விலகி தற்போது மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா இணைந்துள்ளார். அது பும்ராவுக்கு காயத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்றும், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் அடுத்த இருப்பார் என்றும் பல ரசிகர்கள் கூறிவரும் நிலையில் காயத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே அவர் மும்பை அணியை instagram பக்கத்திலிருந்து பின் தொடர்வது நிறுத்திவிட்டார் என்றும் எம்எஸ் தோனியை பின்பற்றி வருகிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே அவர் சென்னை அணியில் இணைய விரும்புகிறார் என்று ரசிகர்கள் அவர்களது கருத்துக்களை தற்பொழுது தெரிவித்து வருகின்றனர் இந்த விஷயமானது இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை