வெற்றியை தன்னுடைய தாய்க்கு சமர்ப்பித்த இஷான் கிஷான் – என்ன காரணம் தெரியுமா?

ஐபிஎல் 2023தொடரின் 46வது லீக் ஆட்டம் மொஹாலி மைதானத்தில் நேற்று மிகவும் சிற்ப்பாக நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 214 ரன்களை குவித்தது. பதிலுக்கு 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை

By ·

ஐபிஎல் 2023தொடரின் 46வது லீக் ஆட்டம் மொஹாலி மைதானத்தில் நேற்று மிகவும் சிற்ப்பாக நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 214 ரன்களை குவித்தது. பதிலுக்கு 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் ரோஹித்தும், கிரீனும் நீண்ட நேரம் நீடிக்க முடியாததால் சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை.

ஆனால் கடந்த சில போட்டிகளில் தோல்வியடைந்த இஷான் கிஷான் மற்றும் சூரிய குமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சூரிய குமார் யாதவ் 31 பந்துகளில் 66 ரன்களை விளாச இஷான் 41 பந்துகளில் 75 ரன்களின் எடுத்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார் . ஆட்ட நாயகன் விருதுபெற்ற இஷான் தன்னுடைய இந்த அற்புதமான இன்னிங்ஸின் பின்னணியில் உள்ள விஷியத்தை பெட்ரி கூறினார்.

அவர் பேசுகையில் “விக்கெட் பேட்டிங் செய்ய மிகவும் நன்றாக இருந்தது. நான் 20 ஓவர்களையும் நான் ஆட முயற்சி செய்தேன். விக்கெட் பிடமாதமாக இருப்பது எனக்கு தெரியும். அதுவும் என்னுடைய ஏரியாவில் பந்துகள் வந்ததால் என்னால் சுலபமாக அடிக்க முடிந்தது. ரிஷி பந்தை ஸ்விங் செய்யும் போது விக்கெட் கீப்பர் பக்கத்தில் இல்லாததால் கிரீஸுக்கு வெளியே சென்று ஆடலாம் என்று முயற்சி செய்தேன். எனக்கு சொன்னது ஒன்றுதான் பந்தை பார்த்து அடிக்க வேண்டும் என்றார் கிஷான்.

215 ரன்கள் என்ற இலக்கை துரத்திய நிலையில் ரோகித் சர்மா ஆகியோர் வெளியேற இஷான் கிஷான் இலக்கை எப்படி திட்டமிட்டார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இஷான் “நீங்கள் 215 ரன்களை துரத்தும்போது பீல்டர் இருக்கிறாரா? இல்லையா என்பது முக்கியமில்லை என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் நீங்கள் பெரிய ஷாட்களை முயற்சி செய்து அடிக்கிறீர்கள். கடைசி ஆட்டத்தை நாங்கள் சிறப்பாக விளையாடி கடைசி ஓவரில் முடித்தோம். இந்த போட்டியையும் கூடிய விரைவில் முடிக்க முயற்சி செய்தோம் என்றார்.

மேலும் பேசிய இஷான் கிஷான் தன்னுடைய தாயை பாராட்டி கூறுகையில் “உடற்தகுதி மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் கடினமாக பயிற்சி செய்கிறோம். போட்டிகளின் போதும் உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்கிறோம். அதற்கு நல்ல உணவு தேவை, எனவே இந்த வெற்றிக்கு எனது அம்மாவே காரணம் என்று கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை