பெரிய ஜாம்பவான் பந்துகளையே எதிர்கொண்டு விட்டோம் – CSK பௌலரை எச்சரித்த இஷான் கிஷான்.
ஐபிஎல் 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. ஐபிஎல் போட்டியில் எத்தனையோ அணிகள் இருந்த போதிலும் காலாகாலம் ஐபிஎல் தொடங்கியதில் இருந்து சென்னை மற்றும் மும்பைக்கு எதிரான ஆட்டம் மட்டும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வருடத்தில் சிறப்பாக சென்னை அணி தொடக
ஐபிஎல் 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. ஐபிஎல் போட்டியில் எத்தனையோ அணிகள் இருந்த போதிலும் காலாகாலம் ஐபிஎல் தொடங்கியதில் இருந்து சென்னை மற்றும் மும்பைக்கு எதிரான ஆட்டம் மட்டும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வருடத்தில் சிறப்பாக சென்னை அணி தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஆனால் மும்பை அணியை பொறுத்தவராயில் தொடக்கத்தில் சொதப்பினாலும் அதற்கடுத்து சுதாரித்து கொண்டு அபாரமான ஆட்டத்தை காட்டி ஆட்டத்தை காட்டி தொடர்ந்து 200 ரன்களை சேசிங் செய்துள்ளது. இந்த நிலையில் தான் இன்று சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இப்படிப்பட்ட நிலையில் தான் மும்பை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் இஷான் கிஷான் சென்னை அணியின் குட்டி மலிங்கா பதிரான பற்றி பேசியிருக்கிறார்.
இஷான் இஷான் பேசியது :
இப்போது வீரர்களின் செயல்பாட்டு திறனை அறிய பல தொழில்நுட்பங்கள் உள்ளன என்று நான் நினைக்கிறேன். வீரரர்களின் செயல்திறன் பற்றி பல வீடியோக்கள் உள்ளன. எனவே அவர் புதிய பந்தில் எப்படி வீசுகிறார் ஸ்லோக் ஓவர்ஸில் என்ன செய்ய முயற்சிக்கிறார் என்பதை நாங்கள் நிச்சயமாக கணித்து செயல்படுவோம். அது எங்களுக்கு அதிகம், உதவும். ஆனால் இந்த கட்டத்தில் ஒரு பந்துவீச்சாளரின் மீது மட்டும் எங்களின் கவனம் கிடையாது.
பந்துகளை விளாசுவோம் :
அதே நேரத்தில் எங்களால் அவருக்கு இவ்வளவு மரியாதை கொடுக்க முடியாது. அவர் நன்றாக பந்து வீசினால் நாங்கள் அவருக்கு மரியாதை கொடுப்போம். ஆனால் ஒரு நேர்மறையான மனநிலையை கொண்டிருக்கும் நாங்கள் அவர் சரியாக பந்துவீசவில்லை என்றால் கண்டிப்பாக அவரது பந்துகளை விளாசுவோம்.
ஆமாம் அதுதான் எங்களின் அணுகுமுறையாக இருக்கிறது. மாலிங்கா எங்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் போது வலைகளில் அவருடன் அதிகமாக பயிற்சி செய்தோம். அதனால் எங்களுக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. அவர் ஒரு புகழ்பெற்ற பந்து வீச்சாளர். அவர் பந்துவீச்சில் இருந்தபோது நாங்கள் சிறப்பாக பயிற்சி செய்தோம். எனவே நாங்கள் பந்தைப் பார்த்து மட்டும் விளையாட போகிறோம்.
அதனை தவிர அவர் யார் என்பதையும் அவர் எப்படி பந்து வீசுகிறார் என்பதும் முக்கியம் கிடையாது. அவருடைய வலிமை என்ன என்பதைப் பற்றியும் நாங்கள் யோசிக்க போவதில்லை. அவரது பந்தில் எப்படி அடிக்கலாம் என்பதனை மட்டுமே நாங்கள் மனதில் வைத்து செயல்படுகிறோம் என்று கூறினார். இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் இவருக்கு எதிராக பதிரனா பந்து வீசுவது மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.