நேற்றைய போட்டியில் இதை கவனித்தீர்களா? 4வது நாள் முடிவில் ரிஷப் பண்ட் பற்றி இஷான் கிஷான் உருக்கம்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டவது டெஸ்ட் போட்டியானது குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் களமிறங்கிய இந்தியஅணி 128 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்களை விளாசியது. இதனையடுத்து முதல் இன்னிங்கை ஆட வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பான

By ·

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டவது டெஸ்ட் போட்டியானது குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் களமிறங்கிய இந்தியஅணி 128 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்களை விளாசியது. இதனையடுத்து முதல் இன்னிங்கை ஆட வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பான தொடக்கத்தை கொடுக்க அப்போது மழை சில முறை குறுக்கிட்டது. இருந்த போதிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை 255 ரன்களுக்கு கட்டுக்குள் கொண்டுவவந்தது. மேலும் மழை வரும் என்ற காரணத்தால் இந்திய 181 ரன்களுக்கு டிக்ளர் கொடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 4நாள் முடிவில் அணியானது 2 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்நிலையில் இந்தியா அணியானது வேகமாக 181 ரன்களை எடுக்க முக்கியமான காரணமாக இருந்தார் இஷான் கிஷான். இவர் டி20 போட்டி போல 34 பந்துகளில் 2 போர்கள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 52 ரன்களை விளாசினார். மேலும் அப்படி அவர் விளையாடும் பொது காயம் அடைந்து சிகிச்சை எடுத்துவரும் ரிஷப் பண்ட் உபயோகிக்கும் RP17 என்ற நம்பர் கொண்ட பேட் ஒன்றை அவர் வைத்திருந்தார்.

மேலும் அந்த பேட்டின் மூலம் ரிஷப் பண்ட் அடிப்பதை போன்றே ஒற்றை கையில் சிக்ஸர் அடித்து விளாசினார். அது பற்றிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. மேலும் இவர் இப்படி அடியான் மூலம் ஒரு விக்கெட் கீப்பராக டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைவான பந்துகளில் அரை சதம் விளாசிய வீரர் என்ற பெருமையும் படைத்தார். இந்த வரிசையில் இந்தியாவில் முதல் இடத்தில் இருப்பது ரிஷப் பண்ட்

இஷான் கிஷான் கொடுத்த பேட்டி :

இப்படிப்பட்ட நிலையில் தான் நாள் முடிவில் பேட்டியில் பேசிய இஷான் கிஷன் கூறுகையில் ” இது உண்மையில் ஒரு ஸ்பெஷலான ஒரு அரை சதம். எனக்கு எதிரியும் அணிக்கு நான் தேவை படுகிறேன் என்று. அனைவரும் எனக்கு நம்பிக்கை கொடுத்தார்கள். விராட் தான் என்னை 4வதாக களமிறங்க சொன்னார், மைத்தனத்தில் ஸ்லோ இடது கைது ஸ்பின்னர் பந்துவீசி கொண்டிருந்தார். ஏனவே விராட் கோலி என்னை மைத்தனத்திற்கு சென்று ரன்களை அடிக்குமாறு கூறினார். அது ஒரு நல்ல திட்டம் தான் சில சமயங்களில் அடு போன்ற முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த போட்டியில் நாளை முடிப்போம் என்று நம்புவதாக கூறினார்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “10 முதல் 10 ஓவர்கள் மழை நின்ற பிற்காடு விளையாட 70-80 ரன்களை எடுத்து 370 -380 டார்கெட் வைக்க வேண்டும் என்று நினைத்தோம். நான் இந்த போட்டிக்கு முன்னதாக என்.சி.ஏ வில் இருந்தேன். அங்கு ரிஷப் பண்டும் இருந்தார். அவர்க்கு தெரியும் நான் எப்படி விளையாடுவேன் என்று. அவரிடம் இருந்து சில அறிவுரைகளை பெற நினைத்தேன். எனக்கு அதிர்ஷ்டம் இருந்ததால் பேட்டிங் பற்றியும் சில விஷியங்ககளை கேட்டு தெரிந்து கொண்டேன்.

அணியில் இருக்கும் மூத்த வீரர்கள் பந்துவீச்சாளர்கள் பற்றி பேசுகின்றனர். எனக்கு நாளை மிகவும் முக்கியமான ஒரு நாள். முடிந்த அளவிற்கு சரியான இடங்களில் பந்துகளை வீசி விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சி செய்வோம். டெஸ்ட் ஆடுவது என்பது என்னுடைய கனவு, நான் ஒவொவொரு பந்துகளையும் அடிக்க முயற்சி செய்தேன். நான் இந்த இடத்திற்கு வந்ததற்கு என்னுடைய பெற்றோர் தான் கரணம் எனவே அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் என்றார் இஷான் கிஷான்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை