ரிஷிப் பண்ட் உலக கோப்பையில் விளையாட மாட்டார்..ஆனால் – ரிஷப் உடல்நிலை குறித்து இஷாந்த் ஷர்மா ஓபன் டாக்.
ரிஷப் பண்ட். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு கார் விபத்தில் பலமான காயங்கள் அடைந்து தற்போதுதான் உடலை தேற்றி மெதுவாக கிரிக்கெட்டில் பயிற்சி எடுத்து வருகிறார். ஆனாலும் வரும் உலக கோப்பை மற்றும் இந்தியா விளையாடும் சில சர்வதேச போட்டிகளில் ரிஷப் பண்டால் விளையாட முடியாது. இதனால் இவருக்கு பதிலாக
ரிஷப் பண்ட். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு கார் விபத்தில் பலமான காயங்கள் அடைந்து தற்போதுதான் உடலை தேற்றி மெதுவாக கிரிக்கெட்டில் பயிற்சி எடுத்து வருகிறார். ஆனாலும் வரும் உலக கோப்பை மற்றும் இந்தியா விளையாடும் சில சர்வதேச போட்டிகளில் ரிஷப் பண்டால் விளையாட முடியாது. இதனால் இவருக்கு பதிலாக ஒரு மாற்று வீரரை இந்தியா தேடிவருகிறது. ஆனாலும் சரியான மாற்று வீரர் இன்னமும் கிடைக்கவில்லை. அவருக்கு மாற்றாக இருந்த கேஎல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டு வெளியேறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. சொல்லப்போனால் அவருடைய திறமையை காட்ட இறுதி போட்டியில் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் அதனை கே.எஸ் பரத் தவறவிட்டுவவிட்டார். இதனால் இவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட இஷான் கிஷான் விக்கெட் கீப்பிங்கில் பல நல்ல கேட்சுகளை பிடித்தார். அதோடு இரணடாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்கில் அவரின் பேட்டிங் சொதப்பினாலும் அதற்கு பிறகு இவர் ஆடிய இரண்டாவது இன்னிங்கில் டி20 போட்டிகளில் விளையாடுவது போல வெறும் 34 பந்துகளில் 52 ரன்களை விளாசி அசத்தினார். இப்படிப்பட்ட நிலையில் தான் இந்தியாவின் முந்தய டெஸ்ட் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் குறித்து வேகப்பந்து வீச்சாளர் இஷான் ஷர்மா பேசியுள்ளார்.
இஷாந்த் சர்மா பேட்டி :
அவர் கூறியதாவது “நாம் வரும் ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவதை பார்க்க மாட்டோம் என்று நினைக்கிறேன்.ஏனென்றால் அவருடைய காயம் சிறியது கிடையாது. அது அபாய கட்டத்திற்கு மிகவும் பக்கத்தில் ஏற்பட்ட ஒரு காயம். அவர் இப்போதுதான் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்து சில ரன்களையும் எடுத்து வருகிறார். அதற்கு பிறகு இன்னமும் பல விஷயங்கள் இருக்கிறது. விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் செய்வது என்பது சாதாரண காரணம் கிடையாது என்றார் இஷாந்த் ஷர்மா.
மேலும் பேசிய அவர் “ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அவருக்கு இரண்டாவதாக அறுவை சிகிச்சை நடக்கவில்லை. அப்படி இரண்டாவது அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது என்றார் அவரினால் வெகு நேரம் வெளியே இருக்க முடியாது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை தான். இருந்த போதிலும் அவர் உலக கோப்ப்பைக்கு தகுதியானவராக இருக்க மாட்டார். ஒருவேளை அவர் குணமடைந்து ஐபிஎல் போட்டிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்றார் இஷாந்த் ஷர்மா.
ரிஷப் பண்ட் அப்டேட் :
ரிஷப் பண்ட் பற்றிய அண்மைய செய்தி சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது அதில் ரிஷப் பண்ட் தன்னுடைய மறுவாழ்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்துள்ளார். அதன் காரணமாக மீண்டும் பேட்டிங் மற்றும் வலைப்பயிற்சியில் கீப்பிங் செய்வதையும் துவங்கியுள்ளார். மேலும் தற்போது அவர் வடிவமைக்கப்பட்ட உடற்பயிற்சி திட்டத்தையும் பின்பற்றுகிறார். அதில் வலிமை நெகிழ்வுத்தன்மை மற்றும் ஓட்டம் ஆகியவை அடங்கும் என்று கூறியுள்ளது குறிப்பிடதக்கது.