இது மட்டும் நடந்தால் அஸ்வினை விட ஆபத்தான பௌலரை பார்க்க முடியாது – இஷாந்த் சர்மா புகழாரம்.

நேற்று தொடங்கிய IND vs WI முதல் டெஸ்ட் போட்டியில் 2 சாதனைகளை படித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது நம்பர் 1 பந்துவீச்சாளராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். பல முக்கியமான போட்டிகளில் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வென்றியடைய பெரு

By ·

நேற்று தொடங்கிய IND vs WI முதல் டெஸ்ட் போட்டியில் 2 சாதனைகளை படித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது நம்பர் 1 பந்துவீச்சாளராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். பல முக்கியமான போட்டிகளில் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வென்றியடைய பெரும் பங்காற்றி இருக்கிறார். ஆனால் கடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் அஸ்வின் இடப்பெறவில்லை.

இந்நிலையில் தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடக்கும் போட்டியில் இந்திய அணியானது விளையாடி வருகிறது. இதில் அஸ்வினுக்கு இடம் கொடுக்கப்பட்ட நிலையில் போட்டி தொடங்கிய சில மணிநேரத்திலேயே 5 விக்கெட்டுகளையும் இரண்டு மூன்று சாதனைகளையும் படைத்தார் அஸ்வின்.

மூன்று சாதனை :

டெஸ்ட் போட்டியில் அப்பாவையும் மகனையும் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையையும், அதிக முறை பவுட் அவுட் செய்த இந்தியர் என்ற சாதனையையும், சர்வதேச கிரிக்கெட்டில் 700 ரன்களை கடந்தவர் என்ற சாதனையையும் படைத்தார் அஸ்வின். இப்படி அஸ்வினின் ருத்ர தாண்டவம் ஆடிய அஸ்வினாலும் ஜடேஜாவினாலும் இந்திய வேஸ்ட் இண்டீஸ் அணியை 150 ரன்களுக்குள் சுருட்டியது. இப்படிப்பட்ட நிலையில் தான் அஸ்வின் குறித்து இஷாந்த் சர்மா புகழ்ந்து பேசியுள்ளார்.

இஷாந்த் ஷர்மா கூறியது :

இஷாந்த் ஷர்மா பேசுகையில் “அங்குல சூழ்நிலைகள் அவருக்கு அஸ்வினின் பந்துவீச்சுக்கு தகுந்தாற் போல இருக்கிறது. ஏனென்றால் பந்து மட்டும் சுழல ஆரம்பித்து விட்டது என்றால் அவரை தவிர ஆபத்தான ஒரு பந்துவீச்சாளர் கிடையாது. பந்து கொஞ்சம் சுழன்றால் கூட அவருக்கு தெரியும் எந்த லைனிலும் லெந்திலும் போட்டு பேட்ஸ்மேனானை விக்கெட்டு எடுக்க வேண்டும் என்று. அந்த காரணத்தினால் தான் அவர் தற்போது 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்றார் இஷாந்த் ஷர்மா.

மேலும் அஸ்வினின் பந்துவீச்சை பற்றி பேசிய அவர் கூறுகையில் “அவரிடம் சிறப்பானது என்னவென்றால் ஒரே மாதிரியாக வேகத்தில் வீசாமல் லைனையும் வேகத்தையும் மாற்றி மாற்றி கலந்து வீசுகிறார். இதனால் பேட்ஸ்மேன்கள் அவருடைய பந்துகளை எப்படி அடிக்க வேண்டும் என்று குழம்பி விடுகின்றனர். திடீரென கீழாக வீசுகிறார் பின்னர் அப்படியே மாற்றி டாஸ் செய்து மேலாக வீசுகிறார்.

அவரிடம் இடது கை வீரர்களாக இருந்தாலும் சரி, வலது கை வீரர்களாக இருந்தாலும் சரி தன்னுடைய பந்துவீச்சை சரியாக பயன்படுத்தினார். வலது கை வீரர்களுக்கு மெதுவாகப் பந்துவீசும்போது, ​​​​அவர் ஸ்டம்புகளுக்கு வெளியே பந்து வீசினார். இவை அனைத்தும் ஒரு நல்ல பந்து வீச்சாளரின் அறிகுறியாகும். அவர் எங்கிருந்து விக்கெட்டை பெற முடியும் என்று விக்கெட்டி சரியாக கணித்து பந்துவீசுகிறார். இதனால் தான் அவரினால் சிறப்பாக செயல்பட முடிகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை