நாங்கள் மாற்றி தான் எடுத்துவிட்டோம் இருந்தாலும் பரவாயில்லை. இவரும் நல்ல வீரர் தான் – பஞ்சாப் அணியின் அறிவிப்பு

ஐபிஎல் 2024க்கான ஏலமானது துபாயில் நேற்று நடைபெற்றது. அதில் அனைத்து அணிகளும் வீரர்களை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வீரர்களை போட்டி போட்டு வங்கியுள்ளது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் வீரர் ஸ்டார்கை அதிக விலையான 24.75 கோடிக்கு ஏலத்தில் கொல்கத்தா அணி அவரை வாங்கியிருந்தது. அதற

By ·

ஐபிஎல் 2024க்கான ஏலமானது துபாயில் நேற்று நடைபெற்றது. அதில் அனைத்து அணிகளும் வீரர்களை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வீரர்களை போட்டி போட்டு வங்கியுள்ளது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் வீரர் ஸ்டார்கை அதிக விலையான 24.75 கோடிக்கு ஏலத்தில் கொல்கத்தா அணி அவரை வாங்கியிருந்தது. அதற்க்கு அடுத்தபடியாக ஹைதராபாத் அணி 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது. இவர் சர்வதேச போட்டிகளில் 2 கோப்பைகளையும் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் கேப்டனாக அணியை வழிநடத்தி கோப்பையை வென்று இருந்தார்.

இது போன்ற வெளிநாட்டு வீரர்களை ஐபிஎல் அணிகள் அதிக விலைக்கு எடுத்தது இந்திய ரசிகர்களை வருத்தமடைய செய்தது. அதற்க்கான காரணம் என்னவென்று பார்த்தால் இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியிருந்தது. அந்த வீரர்களையே ஐபிஎல் அணிகள் தற்போது கோடிகளை கொட்டி வாங்கியது. ஒரு வீரருக்கு இவ்வளவு கோடி கொடுத்து வாங்க கூடாது என்று ரசிகர்கள் ஐபிஎல் அணிகளை விமர்சித்து வருகின்றனர்.

மேலும் பஞ்சாப் அணி நேற்று வீரர்களை ஆவலுடன் ஏலத்தில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் அவர்கள் அதிகபட்சமாக ஹர்ஷல் பட்டேலை 11.5கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தனர். ஏலம் எடுக்கும் ஆவர்வதில் பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரித்தி ஜிந்தா ஒரு வீரரை மாற்றி ஏலம் எடுத்துள்ளார் அதை தற்போது அனைவரும் விமர்சித்து வருகின்றனர். நேற்று நடந்த ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலத்தில், சட்டிஸ்கரை சேர்ந்த 32 வயது வீரரான ஷஷாங் சிங்கை அவரது அடிப்படை விலையான ரூ 20 லட்சத்திற்கு வாங்கியது பஞ்சாப் அணி.

ஷஷாங் சிங் ஏலத்தில் எடுக்கப்பட்ட சிறு நேரத்தில், அந்த அணியின் நிறுவனர்களான பிரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியா, தாங்கள் தவறான வீரரை தேர்வு செய்து விட்டதாக ஏலத்தை நடத்திய மல்லிகா சாகரிடம் முறையிட்டனர். ஏலத்தின் போது விற்கப்பட்ட வீரரை திரும்ப பெற ஐபிஎல் விதிகள் அனுமதிக்காது என்று கூறி அதனை நிராகரித்தார் மல்லிகா சாகர். 19 வயதான ஷஷாங் சிங் என்ற வீரரை எடுப்பதற்கு பதிலாக,

32 வயது வீரரான ஷஷாங் சிங்-ஐ பஞ்சாப் அணியில் ஏற்றுக்கொண்டது பஞ்சாப் கிங்ஸ்.இது குறித்து அணி நிர்வாகம் கூருகையில் , ஐபிஎல் பட்டியலில் ஒரே மாதிரியான இரண்டு வீரர்கள் குழப்பத்தை உருவாக்கினர். சரியான ஷஷாங்க் சிங் களமிறங்கியுள்ளார் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் சில குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார், மேலும் அவரது திறமையை வெளிக்கொணர நாங்கள் தயாராக இருக்கிறோம்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை