நாங்கள் வைத்ததே நல்ல இலக்கு தான். ஆனால் அவர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தது – ஷ்ரேயஸ் ஐயர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 5போட்டிகளைக் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்றது. அதில் முதல் நான்கு போட்டிகளில் இந்தியா அணி மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 5போட்டிகளைக் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்றது. அதில் முதல் நான்கு போட்டிகளில் இந்தியா அணி மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த நேற்று ஐந்தாவது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் வேட் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் சிறப்பாக செயல்படவில்லை.ஜெய்ஸ்வால் 21 ரன்களிலும் ருதுராஜ் 10 ரன்னிலும் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதன் பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தாலும் மறுபக்கத்தில் ஷ்ரேயஸ் ஐயர் நின்று அணிக்கு நல்ல இலக்கை அளித்தனர்.
இந்திய அணியின் அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் 53 ரன்களும் அக்சர் பட்டேல் 31 ரன்களும் ஜிதேஷ் ஷர்மா 24 ரன்களையும் மட்டுமே அடித்து இருந்தனர். கேப்டன் சூரியகுமார் யாதவ் 5 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஆஸ்திரேலியா அணியின் சார்பில் பெஹ்ரன்டோர்ஃப் மற்றும் துவர்ஷுயிஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஆரோன் ஹார்டி,நாதன் எல்லிஸ் மற்றும் டி சங்கா தலா ஒரு விக்கெட்டையும் விழித்திருந்தனர் எனவே இந்திய அணி 20 அவர்கள் முடிவில் 160 ரன்களை மட்டுமே அளிக்க முடிந்தது.
161 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக பெண் மாசிடர்மோட்டா 53 ரன்களும் டிராவிஸ் ஹெட் 28 ரன்களும் கேப்டன் வேட் 22 ரன்களையும் அடித்து இருந்தனர்.இந்திய அணியின் வீரர்கள் போட்டியை கடைசி வரை கொண்டு சென்று இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.
இந்திய அணி சார்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும் அர்ஷ்தீப் சிங் மற்றும் ரவி பிஷ்னோய் தலா இரண்டு விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். எனவே இந்திய அணி 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்த போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் சிறப்பாக விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்து இருந்தனர். அவர் 37 பந்துகளில் 53 ரன்களை குவித்து இருந்தார் அதில் அவர் 5 பவுண்டரிகளும் 2 சிக்சரும் அடித்து இருந்தனர். இது குறித்து ஷ்ரேயஸ் ஐயர் கூறுகையில்,
அனைவரும் கலந்துகொண்டு அணிக்காகப் பங்களிப்பதைக் கண்டு நேர்மையாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஷாட்கள், புதுமைகள் சிறப்பாக இருந்தன, கடைசி ஓவரை வீசும்போது அர்ஷ்தீப்பின் அமைதியை என்னால் பார்க்க முடிந்தது. பூம் பூம் என்று என் எண்ணம் இருந்தது, ஆனால் மூன்று விக்கெட்டுகள் விழுவதைப் பார்த்ததும் என் மனம் கணக்கிட ஆரம்பித்தது. பேட்டிங் செய்வது எளிதான விக்கெட் அல்ல. 160தான் சரியான மொத்தமாக நான் உணர்கிறேன், இறுதியில் இது எங்களுக்கு கிடைத்தது. அதை காக்க ஆஸ்திரேலியா அணியின் சிறப்பான ஆட்டம் இருந்தது.