CSKவிற்க்காக நான் விளையாடிய 50வது போட்டியில் இது நடந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது – ஆட்டநாயகன் ருதுராஜ் கெய்க்வாட்.
ஐபிஎல் 2023 க்கான 67 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதின. இதில் அற்புதமான வெற்றியை பதிவு செய்து சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுளைந்தது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கையே த
ஐபிஎல் 2023 க்கான 67 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதின. இதில் அற்புதமான வெற்றியை பதிவு செய்து சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுளைந்தது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கையே தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கான்வே மற்றும் ருதுராஜ் அணிக்கு அற்புதமான தொடக்கத்தை கொடுத்தனர்.
இருவரும் இணைத்து 141 ரன்கள் என்ற பார்ட்னர்ஷிப்பை கொடுத்தனர். அந்த ஸ்கொர் டெல்லி அணியை வீழ்த்துவதர்க்கு உதவியாக இருந்தது. மேலும் ருதுராஜ் கெய்க்வாட் இந்த போட்டியில் 50 பந்துகளில் 79 ரன்களை விளாசினார். இவரோடு கன்வேவும் 52 பந்துகளில் 87 ரன்களை அடித்தார். இந்த பார்ட்னெர்ஷிப்பில் தான் டெல்லி முதலில் தோல்வியை தாழ்வுயது என்று கூறலாம். இறுதியில் 223 ரன்கள் எடுத்த நிலையில் டெல்லியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை.
ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி :
இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் ஆட்டநாயகன் விருது ருதுராஜ் கெய்க்வாடிற்கு வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர் கூறுகையில் “முக்கியமான போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் என்னுடைய 50 வது ஐபிஎல் விளையாட்டில் என்னுட்ச்ய பங்களிப்பை கொடுத்து வெற்றியை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. இப்படிப்பட்ட ஒரு அணியில் இருப்பதும், அவர்கள் எனக்கு கொடுக்கும் ஆதரவிற்கும் நன்றி என்றார் கெய்க்வாட்.
மேலும் அவர் பேசுகையில் “பந்து கொஞ்சம் நின்று வந்தது. சென்னை மைததானத்தில் பவுண்டரிகள் பெரிதாக இருப்பதினால் பெரிய ஷாட்டுகளை அடிப்பதை விட ரன்கள் எடுத்து ரொடேட் செய்வது நல்லது. ஆனால் சென்னை மைத்தனத்தை ஒப்பிடும் போது இங்கே மைதானம் சிறியதாக இருந்தது. அதிலும் துபே மற்றும் மஹி போன்ற பெரிய ஹீட்டர்கள் வெளியில் இருக்கும் நிலையில் நான் தயாராகிய பின்னர் அடித்து ஆடலாம் என்று முடிவு செய்தேன் என்று கூறினார் ருதுராஜ் கெய்க்வாட்.
இரண்டாவது இன்னிங் :
போட்டியை பொறுத்தவரையில் 224 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே சொதப்பி வந்தது. டேவிட் வார்னர் மட்டுமே பொறுமையாக நின்று 86 ரன்கள் அடித்து ஆட்டமிழந்த நிலையில் டெல்லி அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்து 77 ரன்கள் விதியசத்தில் தோல்வியை தழுவியது. மேலும் சென்னை அணி இந்த போட்டியின் முலம் பிளே ஆஃப் சுற்றில் குவாலிபைர் 1ற்கு தகுதியாகுயுள்ளது குறிப்பிடதக்கது. இந்த போட்டி வரும் 23 ஆம் தேதி சென்னை மைதானத்தில் நடைபெற இருக்கிறது.