இது தான் அவருக்கு பிடித்த ஷாட் ஆனால் அது அவருக்கு கைகொடுக்கவில்லை – பேட்டிங் பயிற்சியாளர் பேச்சு.
தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நேற்று முதல் போட்டியை விளையாடியது. முதல் ஆட்டம் செஞ்சூரியனில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைப்பார் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த
தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நேற்று முதல் போட்டியை விளையாடியது. முதல் ஆட்டம் செஞ்சூரியனில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைப்பார் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்த நேரத்தில் அவர் ஏமாற்றத்தையே அவ அளித்து இருந்தார். இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி விளையாடி வருகின்றது. இந்திய அணி இதற்க்கு முன்பாக 31வருடங்களாக தென்னாபிரிக்காவில் சென்று அங்கு தொடரையும் வென்றது இல்லை.
இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன் படி அது அவர்களுக்கு சிறப்பாகவே அமைந்து இருந்தது. தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்து அடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. இந்திய அணி முதல் நாள் முதல் செஷன் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 91 ரன்களை மட்டுமே அடித்து இருந்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளிக்க முடியவில்லை.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 5 ரன்கள் எடுத்த நிலையில் ராபாடாவிடம் ஆட்டமிழந்தார். அவர் சென்ற பின் ஜெய்ஸ்வால் 17 ரன்னிலும், கில் 2 ரன்னிலும் வெளியேற அதன் பின் நிதானமாக விளையாடி இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்னிலும் அவருடன் மற்றொரு பக்கம் சிறப்பாக விளையாடி கொண்டு இருந்த கோலி 38 ரன்னிலும் அஷ்வின் 8 ரன்னிலும் ஷர்துல் தாக்கூர் 24 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். தென்னாப்பிரிக்கா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி திணறியே வந்தது.
தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ராபாடா 5 விக்கெட்டுகளையும் பர்கர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியை திணற வைத்தனர். தற்போது இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை மட்டுமே அடித்துள்ளது. தற்போது இரு அணிகளும் டீ இடைவெளியில் இருந்தது. அதன் பின் வந்த கேஎல் ராகுல் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து இருந்தார். கே.எல் ராகுல் தன்னை எங்கு விளையாட சொன்னாலும் அந்த இடத்தில் அவர் தன்னை நிருபித்து கொண்டார். தற்போது கே.எல். ராகுல் 70 ரன்னில் விளையாடி வருகிறார். தற்போது மழை குறிக்கிட்டதால் முதல் நாள் ரத்து செய்யப்பட்டது. இந்திய அணி 8 விக்கெட்டுகளை 208 ரன்களை குவித்துள்ளது. இதில் ரோஹித் ஷர்மா விக்கெட் குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரவுத்தர்கூறுகையில்,
நான் ஏற்கனவே அதைப் பற்றி பேசியிருக்கிறேன். அவர் நம்பும் ஷாட் இதுதான், அவர் நிறைய ரன் அடிக்கும் ஷாட் இது. இது அவரது ஷாட். எனவே, அவர் இந்த ஷாட்டை விளையாடப் போகிறார்.” “சில நாட்களில் அது சரியாக இருக்கும் சில நாட்களில், அது தவறாக இருக்கும் . எனவே இன்று, அது இல்லை. அதைப் பற்றி நாம் பேசலாம். மற்றொரு நாளில், அவர் ஒரு சிக்ஸர் அடிப்பார், இது அவர் நன்றாக விளையாடும் ஷாட் என்று எல்லோரும் சொல்வார்கள். உலகிலேயே சிறந்த புல் ஷாட் என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் அதை நம்புகிறார். ஒரு அணி நிர்வாகமாக நாங்கள் அதை ஆதரிக்கிறோம், ”என்று கூறினார்