“நான் எடுத்ததிலேயே மிகவும் கடினமான சிங்கிள் அதுதான்” – கேமரூன் க்ரீன் சதம் குறித்து பேசிய சூரியகுமார் யாதவ்.

ஐபிஎல் 2023 க்கான 69வது லீக்கில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இதில் மும்பை அணி அபாரமான வெற்றியை வேட்டை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தற்போது தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் முதலில்டாஸ் வென

By ·

ஐபிஎல் 2023 க்கான 69வது லீக்கில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இதில் மும்பை அணி அபாரமான வெற்றியை வேட்டை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தற்போது தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் முதலில்டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பௌலிங்கை தேர்வு செய்த மும்பை தொடக்கத்தில் சிறப்பாக பந்துவீசியது.

இருந்த போதிலும் சிறப்பாக் அவ்விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 200 ரன்களை குவித்தது ஹைதராபாத் அணி. 201 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியின் இஷான் கிஷன் 14 ரன்களிலே வெளியேற மறுபுறம் அற்புதமாக விளையாடி வந்த க்ரீன் 20 பந்துகளிலே அவருடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார். ரோஹித் சர்மாவும் 31 பந்துகளில் 50 ரன்களை பூர்த்தி செய்தார்.

13 ஓவர்கள் முடிந்த நிலையில் 1 விக்கெட்டை இழந்த நிலையில் 148 ரன்களை குவித்து வெற்றிக்கு அருகில் சென்றது. ரோஹித் சர்மா 56 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, அதன் பின் வந்த சூர்யகுமார் யாதவ் க்ரீன் இணைந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். க்ரீன் அற்புதமான ஆட்டத்தால் 100 பூர்த்தி செய்த நிலையில் 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 201 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சூரியகுமார் யாதவ் கூறியது :

இந்த வெற்றியின் முலம் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று நாளை லக்னோ அணியுடன் மோத இருக்கிறது. இந்நிலையில் மும்பையின் இந்த அற்புதமான வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் கேமரூன் க்ரீன். அதோடு கடைசி இரண்டு பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சூரியகுமார் யாதவ் சிங்கிள் எடுத்து சதம் அடிக்க உதவி செய்தார். அப்படிப்பட்ட நிலையில் தான் போட்டி முடிந்ததும் பேசியனார் சூரியகுமார் யாதவ்.

அவர் கூறுகையில் “நான் எடுத்திலேயே மிகவும் கடினமாக சிங்கிள் என்றால் அதுதான். பந்தை நான் மிகவும் கவனமாக பார்த்து அடித்தேன். அந்த போட்டியில் சதம் அடிக்க தகுதியானவர் க்ரீன். எங்களுக்கு NNR புள்ளி பற்றி கவலை இல்லாத காரணத்தினால் அது சிறப்பாக இருக்கும் என்று நினைத்தேன் என்றார் சூரியகுமார் யாதவ்.

மேலும் பேசிய அவர் பேசுகையில் டி20 தொடரில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருக்கும் சூரிய வாயை பிளக்கும் பல அற்புதமான ஷாட்டுகளை அடிப்பதில் கைதேர்ந்தவர். எனவே அதனை பெட்ரி கேட்கையில் “அந்த ஷாட்டுகளை என்னுடைய மனதில் 100முதல் 150 முறை சோதித்து பார்ப்பேன். தற்போது அந்த ஷாட்டுகள் சரியாக வந்தது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் SKY.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை