ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் அந்த வீரரை கொண்டு வந்தது சரியான முடிவு தான் – ஆகாஷ் சோப்ரா.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் உ

By ·

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் 20 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. இந்திய அணி இந்த உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறது.

நடந்து முடிந்த உலகக்கோப்பையில் விராட் கோலி தான் அதிக ரன்களை அடித்துள்ளார். அதற்க்கு அடுத்த படியாக ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்தில் இருந்துள்ளார். விராட் கோலி 765 ரோஹித் ஷர்மா 597 ரன்களும் அடித்துள்ளனர். அவர்கள் பேட்டிங்கில் சிறந்த பார்மில் இருந்து வருகின்றனர். 2022 உலகக்கோப்பைக்கு பின்னதாக ரோஹித் ஷர்மா t20 போட்டியில் விளையாடத நிலையில் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வந்தார்.

இந்த வருடம் ஜூன் மாதம் உலகக்கோப்பையானது தொடங்கவுள்ளது. அது குறித்து தான் தற்போது விவாதம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் உலகக்கோப்பையில் அவர் தான் கேப்டன்சி செய்வார் என்றும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணியில் இருக்க மாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆனால் தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான T20 தொடருக்கு அணியை அறிவித்துள்ளது.இதில் துபேவை தேர்வு செய்தது குறித்து ஆகாஷ் சோப்ரா அவர் கருத்தை தெரிவித்து இருந்தார்.

“இந்திய அணி ஷிவம் துபேவை மீண்டும் அழைத்து வந்துள்ளது. இது எனக்கு ஆச்சரியமாக இல்லை, ஏனென்றால் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக உங்களுக்கு ஒரு மாற்று வீரர் தேவைப்படலாம், ஆனால் தென்னாப்பிரிக்காவிலும் உங்களுக்கு அது தேவை என்று நான் நினைக்கிறேன், ”என்று சோப்ரா தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றிய வீடியோவில் கூறினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் நீங்கள் அவரை விளையாடியிருக்கலாம்.

நீங்கள் ஆறு பேட்டர்கள் மற்றும் ஐந்து பந்துவீச்சாளர்களுடன் விளையாடுகிறீர்கள். உங்களிடம் ஆறாவது பந்துவீச்சு விருப்பம் இல்லை, ஆனால் நீங்கள் மாற்றத்தை செய்யவில்லை. துபே இந்தியாவில் ஐந்து போட்டிகளுக்கு அணியில் இருந்தார், ஆனால் நீங்கள் அவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை,” என்று சோப்ரா விளக்கினார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் வீரர்கள், ரோஹித் ஷர்மா(c), சுப்மான் கில், ஜெயஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, சஞ்சு சாம்சண் சிவம் துபே, வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் அணியில் உள்ளனர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை