இந்த இரண்டு பேரை தவிர யாரும் சரியாக விளையாடவில்லை. இது இந்திய அணியின் கேவலமான தோல்வி – இந்திய அணியை சாடிய ஆகாஷ் சோப்ரா.
இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியே இருந்து இருக்கலாம் என்று முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார். IND vs RSA முதல் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அது அவர்களுக்கு சிறப்பாகவே கைகொடுத்தது. இந்திய அணியை ஆரம்பத்தில் அடுத்த
இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியே இருந்து இருக்கலாம் என்று முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார். IND vs RSA முதல் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அது அவர்களுக்கு சிறப்பாகவே கைகொடுத்தது. இந்திய அணியை ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து தடுமாற வைத்தனர். முதல் இன்னிங்க்ஸ் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்களை மட்டுமே அடித்து இருந்தது.
இந்திய அணியின் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 101 ரன்களும், விராட் கோலி 38 ரன்களையும் ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களையும் அடித்து இருந்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ராபடா 5 விக்கெட்டுகளையும் பர்கர் 3 விக்கெட்டுகளையும் கோட்ஸி மற்றும் ஜான்சன் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி ஆரம்பம் முதலே நன்றாக விளையாடி இந்திய அணிக்கு 164 ரன்கள் முன்னிலையில் இருந்தனர்.
அதாவது 2வது இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 408 ரன்களை அடித்து இருந்தது. அதில் அதிக பட்சமாக எல்கர் 185 ரன்களும் ஜான்சன் 84 ரன்களும் பெண்டிகம் 56 ரன்களையும் அடித்து இருந்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் அஷ்வின் பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். எனவே தென்னாப்பிரிக்கா அணி 164 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
அதன் பின் இன்றைய நாளில் 3வது இன்னிங்க்ஸ் விளையாடிய இந்திய அணி 131 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் மூலம் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வியை தழுவியது. மூன்றாவது நாள் தொடங்கும்போது இந்திய அணி விறுவிறுப்பாக விளையாடி அணிக்கு நல்ல ரன்களை சேர்க்கும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் அது முற்றிலும் மாறியது. இந்திய அணியின் தோல்வி குறித்து ஆகாஷ் சோப்ரா கூறுகையில்,
மூன்றாவது நாளில் தோல்வி என்பது மிகவும் கேவலமான விஷயமாக இந்தியா அணிக்கு அமைந்துள்ளது. முதல் இன்னிங்சில் ராகுல் இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி தவிர மற்ற எந்த வீரரும் விளையாடவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டை பேட்டால் மட்டுமே விளையாட முடியும் என்று நம்பக்கூடாது. உடலாலும் அடி வாங்கி பந்தை தடுக்கலாம் ஆனால் அது போன்ற விளையாட வேண்டும் என்று எந்த ஒரு வீரருக்கும் தோன்றவில்லை.
ராபாடா வீசிய பந்தில் கேப்டன் ரோகித் ஷர்மா இரண்டாவது நிமிடத்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இது போன்ற ஆடுகளத்தில் எவ்வாறு விளையாடுவார் என்று எனக்கு தெரியவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர் t20 போட்டி ஒருநாள் போட்டிகளில் நன்றாக விளையாடினாலும் டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாட முடியவில்லை. கில்லின் பேட்டிங் செய்வது சில மாற்றங்களை அவர் செய்ய வேண்டும் நன்றாக விளையாடுகிறார் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியிருந்தார்.