ரோஹித் ஷர்மாவை மட்டும் குறை சொல்ல முடியாது. வீரர்களை அப்படி பார்க்க கஷ்டமா இருக்கு – ராகுல் டிராவிட்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி போட்டியுடன் முடிவடைகிறது. நேற்று உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் நரேந்திர மோடி மைதானத்த
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி போட்டியுடன் முடிவடைகிறது. நேற்று உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடியது . இந்திய அணி லீக் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று பலம் வாய்ந்த அணியாக நேற்று ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடியது .
ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவி இருந்தாலும் அதன் பின் நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பதித்து நேற்று இந்திய அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பௌலிங் செய்வதாக தேர்வு செய்தார். இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி விளையாடியது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை மட்டுமே குவித்து இருந்தது.
இந்திய அணியின் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 66 ரன்களும் விராட் கோலி 54 ரன்களுக்கும் ரோஹித் ஷர்மா 47 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணியின் பேட்டிங் சுமாராகவே இருந்தது. இந்திய அணி இறுதிப் போட்டியில் இது போன்று சொதப்பியது இந்திய ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வூட் தலா 2 விக்கெட்டுகளையும் மேக்ஸ்வெல் மற்றும் ஜாம்பா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.
241 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் சிறிய தடுமாற்றம் இருந்தாலும் அதன் பின் ட்ராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி இந்திய அணியை எளிதாக இறுதிப் போட்டியில் வென்றனர். ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 241 ரன்களை குவித்து வெற்றி பெற்றனர். ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 137 ரன்களும் மார்னஸ் லாபுசாக்னே58 ரன்களும் மார்ஷ் 15 ரன்களையும் அடித்து ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி எளிதாக வெற்றி பெற்றது.இந்திய அணி சார்பில் பும்ரா 2 விக்கெட்டுகளையும் ஷமி 2 ஒரு விக்கெட்டையும் மட்டுமே வீழ்த்தி இருந்தன. எனவே ஆஸ்திரேலியா அணி 6 முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி பலம் வாய்ந்த அணியாக இருக்கின்றது. இந்திய அணி லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது.
ராகுல் டிராவிட் கூறுகையில் ரோகித் சர்மா சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் அணிக்கு சிறந்த தொடக்கத்தை அமைக்க எப்பொழுதுமாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றார். நாங்கள் ஒரு குறிப்பிட்ட அதிரடியான வழிகளை விளையாட வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். ரோஹித் சர்மா சிறப்பாக பேட்டிங் செய்தார் ஒரு கேப்டனாக அவர் எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது.
எங்களால் பவுண்டரிகளை அடிக்க முடியவில்லை நாங்கள் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்ய முடியாமல் தவித்து வந்தோம். ஒரு பயிற்சியாளராக வீரர்களை இவ்வாறு பார்ப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. வீரர்களும் கடினமாகவே உழைத்தார்கள் இதுதான் விளையாட்டு இது நடக்கும் அன்றைய நாளில் சிறந்த அணியை வெற்றி பெறும். நாளையிலிருந்து புதியதாக ஒன்றை கற்றுக் கொள்வோம் என்றும் அவர் கூறி இருந்தார். ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பு நேற்றுடன் முடிவடைந்தது என்பது குறிப்பிட தக்கது.