வருடம் முடிவில் ஜடேஜாவுக்கு அடுத்ததடுத்து வரும் மகிழ்ச்சியான செய்திகள். யாரும் செய்யாத சாதனையை செய்த ஜடேஜா.

இந்த வருடத்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி மற்றும் 500 ரன்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை ரவீந்திர ஜடேஜா அடைந்து இருந்தார். அது மட்டும் அல்லாமல் இந்த வருடம் முழுவதும் அனைத்து வகையான போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.இந்திய அணி

By ·

இந்த வருடத்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி மற்றும் 500 ரன்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை ரவீந்திர ஜடேஜா அடைந்து இருந்தார். அது மட்டும் அல்லாமல் இந்த வருடம் முழுவதும் அனைத்து வகையான போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.இந்திய அணி இந்த வருடம் இரண்டு முறை இரண்டு வகையான போட்டிகளில் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியை தழுவி இருந்தது.

அது என்ன என்ன என்று பார்த்தல் ஒன்று உலக டெஸ்ட் சாம்பியன் மற்றும் ஒரு நாள் உலக கோப்பை போட்டி. இதில் இரண்டிலும் இந்திய அணி இறுதிவரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது. உலகக்கோப்பை 2023ல் இந்திய அணி இறுதிப்போட்டியில் யாரும் எதிர்பாராத தோல்வியை தழுவி இருந்தது. அதில் இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இருப்பினும் அவரால் பேட்டிங்கில் ஜொலிக்க முடியவில்லை. அதே போல் அவருக்கு பேட்டிங் அவ்வளவு கிடைக்கவில்லை. உலககோப்பை முழுவதும் அவர் 120 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார். மேலும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை இறுதியில் வெற்றி பெறவைத்தார். ICC உலகக் கோப்பை 2023 அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான்களான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே இறுதிப் போட்டியில் விளையாடியது.

டிராவிஸ் ஹெட்டின் சிறப்பான சதம் மற்றும் சிறப்பான பந்துவீச்சுக் காட்சியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 6வது உலகக் கோப்பை பட்டத்தை கைப்பற்றியதால், இந்தியாவுக்கான மனவேதனை வெளிப்பட்டது. இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அனைத்து 10 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்தியாவின் அசாத்திய சாதனை இருந்தபோதிலும், உலர் ஆடுகளம் விக்கெட் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருந்தது.உலகக்கோப்பை போட்டி முழுவதிலும் சேர்த்து முகமது சமி 24 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த இருந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வந்தார்.

4 இடத்தில் பும்ரா 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இருப்பினும் இந்த வருடத்தில் சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து ஜடேஜா தான் முதல் இடத்தில் இருந்து வருகிறார் 66 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். அதற்க்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 63 விக்கெட்டுகளை எடுத்து இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறார். இந்த வருடம் சில மணி நேரங்களில் முடிவடையும் நிலையில் இது போன்ற மகிழ்ச்சியான செய்திகள் ரவீந்திர ஜடேஜவிற்கு பலத்தை சேர்த்து வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை