சிம்பிளா விளையாடினா போதும்.. ஸ்டேடியம் அப்படி – ரவீந்திர ஜடேஜா தகவல்.

லக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள் 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த உலக கோப்பைய

By ·

லக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள் 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த உலக கோப்பையில் தொடர்ந்து மூன்று முறை வென்ற இந்திய அணியானது இன்று பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டு வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியானது பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. ஆனால் இந்த போட்டியில் கேப்டன் சகீப் அல் ஹாசன் இல்லை. மேலும் கடந்த சில போட்டிளில் பங்களாதேஷ் அணியானது கொஞ்சம் தடுமாறிய நிலையில் பின்னர் பொறுமையாக விளையாடி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களை எடுத்திருந்தது. இது இந்த மைதானத்தில் கொஞ்சம் குறைவான ஸ்கோர் தான்.

ஏனென்றால் புனே மைதானம் சிரிய பவுண்டரிகளை கொண்டது என்பதினால் அடித்து ஆடுவதில் பயம் தேவையில்லை. இந்நிலையில் இந்த போட்டியின் போது அற்புதமாக பவுலிங் மற்றும் பில்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா மைதானத்தில் நின்றுகொண்டிருந்த போது சிறந்த பீல்டருக்கான பதக்கத்தை தனக்கு கொடுக்குமாறு இந்திய அணியின் பயிற்சியாளரிடம் சைகை செய்தார்.

இந்நிலையில் அந்த விஷயம் குறித்தும், மைதானம் குறித்தும் முதல் இன்னிங் முடிந்த பிறகு பேசியிருந்தார். அவர் கூறுகையில் “விக்கெட் மிகவும் நன்றாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், விக்கெட்டை எந்த திருப்பமும் இல்லை. எளிமையான கிரிக்கெட்டை விளையாடினால் போது இந்த இலக்கை துறத்தலாம். இந்த கொண்டாட்டம் எங்கள் பீல்டிங் பயிற்சியாளருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆட்டத்திற்குப் பிறகும், எங்களுக்கு சிறந்த ஃபீல்டர் விருது கிடைக்கும்.

அதனால் பீல்டிங் பயிற்சியாளரிடம் நானும் இங்கே இருக்கிறேன் என்று கூறினேன். இந்த விக்கெட் பிளாட் விக்கெட் என்று சொல்வேன், பந்து பேட்டில் நன்றாக வருகிறது, எங்கள் பேட்டர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து அதை விரட்டுவார்கள் என்று நம்புகிறேன். இதில் விக்கெட் எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் ஸ்டம்புகளுக்குள் பந்து வீச வேண்டும், ஸ்பின்னர்களுக்கு விக்கெட்டில் எதுவும் இல்லை, எனவே நீங்கள் அதை இறுக்கமாக வீச வேண்டும் என்றார் ஜடேஜா.

இந்நிலையில் தற்போது விளையாடிவரும் இந்திய அணி மிகவும் அதிரடியாக விளையாடி வருகிறது. தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டிய ரோஹித் சர்மா 48 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் அடுத்ததாக வந்த விராட் கோலியும் சுப்மன் கில்லும் அதிரடி காட்டினார்கள். ஆனால் சுப்மன் கில் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் தற்போது இந்த செய்தியை எழுதும் வரையில் இந்திய அணி 22 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை குவித்துள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை