அணிக்கு வெற்றியை தேடி தந்த ஜடேஜாவின் காலில் விழுந்து வணங்கிய அவரின் மனைவி – மனதை உருக்கும் வீடியோ.
சென்னை அணியில் ஒரு சில கசப்பான நிகழ்வுகள் சூழல் பந்து வீச்சாளர் ஜடேஜாவுக்கு நடந்தது. ஏனென்றால் ஜடேஜா பொதுவாக தோனிக்கு முன்னராக களமிறங்கி சில சிக்ஸர்களை விளாசுவார். அதோடு ஜடேஜாவும் தோனியும் இணைந்து வியாடுவது அணியின் வெற்றிக்கு காரணமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் தான் தோனிக்கு கடை
சென்னை அணியில் ஒரு சில கசப்பான நிகழ்வுகள் சூழல் பந்து வீச்சாளர் ஜடேஜாவுக்கு நடந்தது. ஏனென்றால் ஜடேஜா பொதுவாக தோனிக்கு முன்னராக களமிறங்கி சில சிக்ஸர்களை விளாசுவார். அதோடு ஜடேஜாவும் தோனியும் இணைந்து வியாடுவது அணியின் வெற்றிக்கு காரணமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் தான் தோனிக்கு கடைசி போட்டி என்பதினால் தோனியை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஜடேஜா விரைவில் ஆட்டமிழக்க வேண்டும் என்று பதாகைகளை ஏந்தி வந்தனர்.
பேட்டியில் கூட ஜடேஜா பேசுகையில் தோனியை காண்பதற்காக நான் ஆட்டமிழக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டிகொள்கின்றனர், எப்படி இருந்தாலும் அணி வெற்றியடைந்தால் அதுவே போதும் என்று சிரித்தபடி கூறினார். ஆனால் அவரது சிரிப்புக்கு உள்ளே வருத்தம் இருப்பது அவர் போட்ட அடுத்தடுத்த ட்விட்டர் பதிவுகளில் தெளிவாகவே தெரிந்தது. சொல்லப்போனால் ஓப்பனாகவே ஒரு ட்விட்டர் பதிவில் சொல்லிவிட்டார்.
ஆடியிருக்கையில் ஐபிஎல் 2023 ல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. ஆனால் இந்த போட்டி நடைபெறுவதற்குள் மழை காரணமாக பலவிதமான சிக்கல்கள் வந்தது. முதல் இன்னிங்கின் 20வது ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 214 ரன்களை குவித்தது. 215 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே மழை குறுக்கீட்டு போட்டி நிருத்தி வைக்கப்பட்டது.
#RavindraJadeja #RivaBaJadeja #MSDhoni𓃵 #GTvCSK #GTvsCSK
— 👑👌🌟 (@superking1816) May 30, 2023
Ravindra Jadeja's wife touched Jadeja's feet after the victory last nightpic.twitter.com/g7r5mArM2Q
பின்னர் மழை நின்றபோதும் மைதானம் காரணமாக போட்டி 1 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டது. இதனால் 15 ஓவர்களுக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அப்போது தோனி முக்கியமான நேரத்தில் களமிறங்கி ஆட்டமிழந்த நிலையில் அனைத்தும் முடிந்து விட்டது என்ற போது ஜடேஜா கடைசி 2 பந்துகளில் 10 ரன்களை விளாசினார். அது ரசிகர்களுக்கு மட்டுமல்ல அணியின் வீரர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
Video of the day – The moments Ravindra Jadeja's wife touched Jadeja's feet after the IPL 2023 Trophy victory.pic.twitter.com/VnibdcyTfT
— CricketMAN2 (@ImTanujSingh) May 31, 2023
மேலும் வெற்றி பெற்றதும் சென்னை அணியின் கேப்டன் தோனி ஜடேஜாவை தூக்கி கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டார். அது ரசிகர்களுக்கு மனதை ஊருக்கும் காட்சியாக இருந்தது. அதோடு தான் ஆட்டமிழக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்ட ரசிகர்களிடமே தான் சென்னை அணிக்கு எவ்வளவு முக்கியம் அணிக்கு என்பதை அந்த வெற்றியின் மூலம் காட்டினார் ஜடேஜா.
இந்நிலையில் அற்புதமாக விளையாடி அணிக்கு கோப்பையை பெற்று கொடுத்த பின்னர் மைத்தனத்தில் இருந்த ஜடேஜாவுடன் ஓடிவந்து அவரின் கால்களை தொட்டு வணக்க்கினார் ஜடேஜாவின் மனைவி ரவிபா பல ஆயிரம் ரசிகர்கள் இருந்த மைத்தனத்தில் யார் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்காமல் தன்னுடைய கணவரின் கால்கலை தொட்டு வனங்கியது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அது தொடர்பான வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
#IPL2023Finals #Jadeja #MSDhoni #CSKvsGT #GTvCSK#CSKvGT
— 👑👌🌟 (@superking1816) May 30, 2023
Ravindra Jadeja, his wife and his daughter with the IPL trophy.
A beautiful family picture pic.twitter.com/gIGImZSCgD
மேலும் ஐபிஎல் கோப்பையுடன் ஜடேஜாவின் அருகில் நின்ற போதும் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தனது தலையில் சேலையை போர்த்திக் கொண்டு அவருடைய மனைவி சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்தது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் பலர் சேலை கட்டுவதற்கே யோசிக்கும் நிலையில், பல ஆயிரம் மக்கள் இருக்கும் மைத்தனத்தில் இப்படி ஒரு செயலை ஜடேஜாவின் மனைவி செய்தது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.