இஷான் கிஷனிடம் ஜெய் ஷா ரோஜர் பின்னி பேச வேண்டும் – இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பேச்சு

இஷான் கிஷன் போன்ற ஒருவருக்கு, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி மற்றும் தேர்வாளர்கள் அவருடன் பேச வேண்டும் கங்குலி கருத்து தெரிவித்து இருந்தார். சில நாட்களாக இணையத்தில் பகிரப்பட்டு வரும் செய்தி என்றால் அது இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர்கள் சம்பளம் மத்திய ஒப்

By ·

இஷான் கிஷன் போன்ற ஒருவருக்கு, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி மற்றும் தேர்வாளர்கள் அவருடன் பேச வேண்டும் கங்குலி கருத்து தெரிவித்து இருந்தார். சில நாட்களாக இணையத்தில் பகிரப்பட்டு வரும் செய்தி என்றால் அது இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர்கள் சம்பளம் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டது தான் பிசிசிஐ நேற்று மத்திய ஒப்பந்தம் 2023 மற்றும் 2024 காண பெயர்களை வெளியிட்டது. அதில் சில முக்கிய வீரர்களின் பெயர்களை மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நிக்கியது தான்.

அதில் குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் பெயர்கள் தான் மிகவும் பேசப்பட்டு வந்தாலும் அதற்கு அடுத்தபடியாக சாஹல் புஜாரா ஷிகர் தவான் உமேஷ் யாதவ் ஆகியோரின் பெயர்களும் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.இஷான் கிஷான் தென் ஆப்பிரிக்கா எதிரான டெஸ்ட் தொடரின் போது மன சோர்வு காரணமாக அணியிலிருந்து விலகினார். ஆனால் அதன் பின்னர் அவர் ரஞ்சி டிராபியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடாமல் ஐபிஎல் 2024 பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

இதற்கு பிசிசிஐ எப்போது ஒரு எச்சரிக்கை ஒன்றையும் அளித்து இருந்தது. ரஞ்சி ட்ரோபியில் விளையாட வேண்டும் என்றும் கூறியிருந்தது. இஷான் கிஷன் அதனை சற்றும் மதிக்காமல் அவ்வாறு தொடர் ஐபிஎல்காக பயிற்சி மேற்கொண்டு வந்திருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் “இஷான் கிஷன் போன்ற ஒருவருக்கு, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி மற்றும் தேர்வாளர்கள் அவருடன் பேச வேண்டும். இத்தனைக்கும் அவர் ரஞ்சி விளையாடிவிட்டு வெள்ளைப் பந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

டெல்லி கேப்பிட்டல்ஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வீரர்களும் சையத் முஷ்டாக் அலி டிராபி, விஜய் ஹசாரே டிராபி மற்றும் ரஞ்சி டிராபியில் விளையாடியுள்ளனர். இஷாந்த் சர்மா கூட ரஞ்சியில் விளையாடியுள்ளார்,” என்று பிசிசிஐயின் முன்னாள் தலைவர் மேலும் கூறினார். ஐயர் கிரேடு B இன் ஒரு பகுதியாக இருந்தார், அதே நேரத்தில் கிஷன் BCCI இன் முந்தைய மத்திய ஒப்பந்தப் பட்டியலில் கிரேடு C இல் இருந்தார்.

மும்பை பேட்டர் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு டெஸ்டில் விளையாடினார், அதற்கு முன்பு கடைசி மூன்று சந்திப்புகளுக்கான அணியில் இருந்து விலக்கப்பட்டார். இதற்கிடையில், கிஷனின் கடைசி இந்திய தோற்றம் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 ஐ தொடரில் சொந்த மண்ணில் நடந்தது. பல வடிவ சுற்றுப்பயணத்திற்காக இந்திய அணியுடன் தென்னாப்பிரிக்காவிற்கு அவர் பயணம் செய்தார், ஆனால் ‘தனிப்பட்ட காரணங்களை’ காரணம் காட்டி வீடு திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை