டிரேசிங் அறை நோக்கி சென்ற ரிஸ்வான். அத்துமீறிய அகமதாபாத் ரசிகர்களால் மைதானத்தில் ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம் கோஷம்.
அகமதாபாத்தில் ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி
அகமதாபாத்தில் ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இந்தியா விளையாடும் போட்டிகளை காண எதிராணிகளை விட இந்தியர்களே மைதானத்தில் அதிகம் கூடுகின்றனர்.
இதனால் இந்திய அணி நல்ல உற்சாகத்துடன் இந்த தொடரில் ஆடி வருகிறது. அதே போல் இந்திய விளையாடாத போட்டிகளில் கூட்டம் குறைவாக வருவதையும் காணலாம். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரின் 12வது லீக் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்று இருந்தது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. அதில் டாஸ் வென்று முதலில் அனல் பறக்க பந்து வீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 42.5 ஓவரில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது.
பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50, முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து 192 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கி தலா 6 பவுண்டரி சிக்சருடன் 86 (63) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார்.
What a VIBE ! 🚩
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) October 14, 2023
The Whole Crowd was Singing Jai Shree Ram, at the grand #NarendraModiStadium 🔥#INDvsPAK #ICCCricketWorldCup23 #TeamIndia #JaiShreeRam #PrabhuShreeRam pic.twitter.com/t8xEuEUqrd
30.3 ஓவரிலேயே இந்த எளிய இலக்க எட்டிப்பிடித்து எளிதாக வென்ற இந்தியா உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்தது.இந்த போட்டியை காண பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே அதிகம் மைதானத்தில் இருந்தனர். போட்டியின் இடையே இந்திய ரசிகர்கள் அனைவரும் வந்தே மாத்திரம் பாடியது மெய் சிலிர்க்க வைத்தது.
அகமதாபாத்தில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் 49 ரன்களில் பும்ராவின் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறிய பொழுது அங்கு இருந்த இந்திய ரசிகர்கள் அவரைப் பார்த்து ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் என்று கும்பலாக கோஷங்ககளை எழுப்பினார்கள். வழக்கமாக வீரர்களின் பெயர்களை கூறிதான் அவ்வாறு தான் கோஷமிடுவார்கள். அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் என்று மட்டுமே அவர்கள் கூச்சலிட்டிருந்தனர்.
As per Pakistanis, offering Namaz is okay but chanting "Jai Shree Ram" is not okay. Hypocrites.
— The Right Wing Guy (@T_R_W_G) October 14, 2023
We will do. Stop if you can.#JaiShreeRam #INDvsPAK #indvspak2023 #NarendraModiStadium #ICCCricketWorldCup23 pic.twitter.com/0fH3BfniOr
2016 ஆம் ஆண்டு மொகலியில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போட்டியிலே மற்றும் 2016 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் இது போன்று கோஷங்கள் எழுப்பப்படவில்லை. இதற்குப் பல்வேறு தரப்பினரும் அவர்கள் அதை எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர் குறிப்பாக தமிழகத்தின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்