இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்த ஜெய்ஸ்வால். முதல் நாள் முடிவில் இந்திய அணியின் சிறப்பான வெளிப்பாடு.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்களில் இந்திய அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் பின்தங்கிய நிலையில், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஆலி போப் சிறப்பான இன்னிங்ஸில் 196 ரன

By ·

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்களில் இந்திய அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் பின்தங்கிய நிலையில், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஆலி போப் சிறப்பான இன்னிங்ஸில் 196 ரன்களுடன் இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்து இருந்தார்.

இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் அவரது அந்த சிறப்பான பேட்டிங் தான். இந்திய அணிக்கு நான்காவது இன்னிங்சில் 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது, தொடக்க ஆட்டக்காரர் டாம் ஹார்ட்லி 7/62 எடுத்ததால் இந்திய அணியால் அந்த இலக்கை துரத்த முடியாமல் போனது. தொடரின் தொடக்க ஆட்டத்தில் சங்கடமான தோல்வியைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸின் போது பல நிபுணர்கள் அவரது கருத்துகளை கூறி வருகின்றனர்.

இன்று இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் தேர்வு செய்திருந்தது. இந்தப் போட்டியானது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி ஆரம்பத்தில் மெதுவான தொடக்கத்தை அளித்து இருந்தாலும் அதன் பின் சிறப்பாகவே விளையாடி கொண்டு இருந்தது. ரோஹித் ஷர்மா 14 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறி இந்திய அணி ஏமாற்றத்தை அளித்திருந்தார். அதன் பின்வந்த சுப்மான் கில் 34 ரன்கள் ஆட்டம் இழந்து வெளியேறி தனக்கு அளிக்கப்படும் வாய்ப்பை இழந்து கொண்டே வருகிறார். அதன் பின் ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இவர்கள் இரண்டு பேர் மீதும் சமிபத்தில் சில குற்றச்சாட்டுகள் வந்த வண்ணமே உள்ளது இந்த இரண்டு வீரர்களையும் நீக்கி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று பலர் கருத்துகளை கூறி வந்தனர். ஆனால் இந்த போட்டியில் விராட்கோலிஜடேஜா கே.எல்.ராகுல் ஆகியோர் இல்லாத காரணத்தினால் மட்டுமே இந்த இரண்டு வீரர்களும் இந்த போட்டியில் விளையாடி உள்ளனர். இருப்பினும் அவர்கள் தங்களை நிருப்பிக்க தவறிவிட்டனர்.

இறுதியில் இந்திய அணி இன்றைய நாள் முடிவில் 336 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜெயஸ்வால் 179 ரன்களை அடித்துள்ளார். இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சாளர் அகமது மற்றும் பஷிர் தலா ஹார்ட்லி மற்றும் அண்டர்சன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். இன்றைய நாளில் கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை வீணாக்கி கொண்டே இருந்து வருகிறார்கள்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை