22 வயசு தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது வரை யாரும் செய்யாத சாதனைகளை செய்து அசத்திய ஜெய்ஸ்வால். என்ன என்ன சாதனை தெரியுமா??
22 வயதில் இதுவரை யாரும் செய்யாத பல சாதனைகளை செய்த ஜெய்ஸ்வால். இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இரண்டில் 1 - 1 என்ற கணக்கில் இரு அணிகளும் தொடரை சமன் செய்துள்ளது. மூன்றாவது போட்டியானது ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்
22 வயதில் இதுவரை யாரும் செய்யாத பல சாதனைகளை செய்த ஜெய்ஸ்வால். இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இரண்டில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் தொடரை சமன் செய்துள்ளது. மூன்றாவது போட்டியானது ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் இந்திய அணிக்கு பெரிய அடியாக முதல் செஷன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது.
இந்திய அணியில் சார்பில் ஆரம்பத்திலே ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும் கில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.அதன் பின் படிதாரும் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 131 ரன்களிலும் அறிமுக நாயகன் சர்ப்ராஸ் கான் 62 ரன்ககளிலும் ஆட்டமிழந்தனர். குல்தீப் 4 ரன்களிலும் ஜடேஜா 112 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களை அடித்து இருந்தது.
அதன் பின் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் சிறப்பாக இருந்தாலும் மிடில் ஆர்டரில் எந்த ஒரு வீரரும் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. எனவே இங்கிலாந்து அணி 319 ரன்களில் அணைந்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின் பேட்டிங் செய்த இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை திணற வைத்து இருந்தது. இந்திய அணியின் இளம் தூண்களான ஜெய்ஸ்வால் மற்றும் சர்ப்ராஸ் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்திய அணி ஜெய்ஸ்வால் ரன்களிலும் சர்ப்ராஸ் கான் ரன்களில் இருக்கும் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா டிக்ளர் செய்தார். இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 430 ரன்களை குவித்து இருந்தது. இங்கிலாந்து அணிக்கு 556 ரன்களை இலக்காக் நிர்ணயம் செய்து இருந்தது. இதில் ஜெய்ஸ்வால் இது வரை டெஸ்ட் போட்டியில் யாரும் செய்யாத சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதில் ஒன்று 147 வருட கிரிக்கெட் வரலாற்றில்
டெஸ்ட் தொடரில் 20 சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையும், 22 வயதில் டெஸ்ட் தொடரில் 500 ரன்களை கடந்த இந்திய இரு வீரர்களில் ஐவரும் ஒருவர், ஒரு டெஸ்ட் இன்னிங்க்சில் 10 சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீர என்ற சாதனையும், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் 2 சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்து இருந்தார். இங்கிலாந்து அணி தற்போது 4 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்களில் தடுமாறி வருகிறது.