ஒரே ஓவரில் 6,6,6,6 அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய ஜேசன் ராய் – வீடியோ உள்ளே.

இந்தியன் பிரீமியர் லீக்கில் லீக்கின் 36வது ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பௌலிங் செய்ய முடிவு செய்தார். கொல்கத்தா அணி தொடர் தோல்வியில் இருந

By ·

இந்தியன் பிரீமியர் லீக்கில் லீக்கின் 36வது ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பௌலிங் செய்ய முடிவு செய்தார். கொல்கத்தா அணி தொடர் தோல்வியில் இருந்து மீளவும் புள்ளி பட்டியலில் முன்னேறவும் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

அதன் படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க அட்டகாரர்கள் ஜெகதிசன் மற்றும் ராய் கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கத்தையே குடுத்தனர். 6 வது ஓவரை வீசிய ஷபாஸ் அஹமத் ஓவரில் ஒரே ஓவரில் 25 ரன்களை விட்டு கொடுத்தார். ராய் 22 பந்துகளில் அவருடைய அரை சதத்தை அடைந்தார், 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்களை குவித்துவந்தனர்.

இந்நிலையில் 27 ரன்களில் ஜெகதிசன் அவுட்டாகி வெளியேற, அதன் பின்னரே ராய் 56 ரன்களில் வெளியேறினார். அதன் பின்னரே அணியின் ஸ்கோர் மட மடவென குறைய தொடங்கியது. பெங்களூரு அணியின் பௌலர்கள் அதன் பின் சிறப்பாகவே செயல்பட்டு கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்களை திணற வைத்து வந்தனர். அதன் பின் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் கேப்டன் ரானா நிதானமாக விளையாடி ரன்களை உயர்த்தி வந்தனர்.

இருவர்களும் இணைந்து 36 பந்துகளில் 50 ரன்களை பூர்த்தி செய்தனர். அணியின் கேப்டன் ரானா அதன் பிறகு அதிரடியை காட்டத்தொடங்கினார். அதன் பின் வந்த வீரர்கள் அனைவரும் நன்றாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது கொல்கத்தா அணி. இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஜேசன் ராய் சிறப்பான தொடக்கத்தை அளித்தார்.

ராய் 29 பந்துகளில் 56 ரன்கள் குவித்து முக்கியமான இன்னிங்சை விளையாடினார். இதன் போது அவர் 22 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். அவரது இன்னிங்ஸின் போது, ​​அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களையும் அடித்தார். இதன் போது ஆறாவது ஓவரில் ஷாபாஸ் அகமதுவின் 4 பந்துகளில் 4 சிக்ஸர்களுக்கு அடித்தார். அதன் மூலம் 25 ரன்களை கொடுத்தார் ஷாபாஸ் அகமது இதனால் சிறிது வருத்தமடைந்தார் விராட்கோலி.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை