மீண்டும் பழைய படி வருகிறாரா பும்ரா? வெளியான வீடியோ..விமர்சிக்கும் நெட்டிசன்கள்.
இந்தியாவின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான பும்ரா காயம் காரணமாக கடந்த ஒரு ஆண்டு காலமாக போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். மேலும் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் கூட கலந்து கொள்ளாமல் தொடர்ந்து ஓய்வெடுத்து வந்தார். 26 வயதாகும் பும்ரா கடந்த 2016 முதல் சர்வதேச போட்டிகளில்
இந்தியாவின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான பும்ரா காயம் காரணமாக கடந்த ஒரு ஆண்டு காலமாக போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். மேலும் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் கூட கலந்து கொள்ளாமல் தொடர்ந்து ஓய்வெடுத்து வந்தார். 26 வயதாகும் பும்ரா கடந்த 2016 முதல் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்கு மிக முக்கியமான பந்து வீச்சாளராக இருந்து வருகிறார்.
இவர 60 சர்வதேச டி20 போட்டிகள், 72 ஒருநாள் போட்டிகள் மற்றும் 30 டெஸ்ட் போட்டிகள் என விளையாடி அதில் மொத்தமாக 319 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் கடைசியாக கந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த டி20 போட்டியில் கலந்து கொண்டிருந்தார். அதற்கு பிறகு முதுகில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக வலி ஏற்பட்டது. இதனால் இந்தியாவிற்க்க விளையாடாமல் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது நல்ல குணமாகி இருக்கிறார்.
மேலும் வரும் உலக கோப்பை டெஸ்ட் போட்டியில் இவர் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியில் பும்ரா இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும், அதில் அவர் செயல்பாட்டை பார்த்து விட்டுத்தான் மேலும் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ரோஹித் ஷர்மாவும் பும்ரா விரைவில் வந்தால் நன்றாக இருக்கும் எண்டு கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் பும்ரா பற்றி ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பும்ரா மும்பை அணியின் வீரர்கள் என கூறப்படும் பேட்ஸ்ம்மேன்களுக்கு பும்ரா பந்துவீசுகிறார். அவர் பந்துவீச்சுவது முன்பை போலவே சரியாக எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. இதனால் எப்படி இந்திய அணியை விட்டு சென்றாரோ அப்படியே திரும்பி வந்துள்ளார் என்று நாம் கருதலாம்.
Jasprit Bumrah is coming back….!! pic.twitter.com/tt8WNIHVU2
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 31, 2023
ஆனால் பும்ரா பந்துவீசும் புதிய வீடியோ என்று சொல்லப்படும் இந்த வீடியோ பதிவில் பும்ரா வீசும் தன்மை குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அவர் பந்துவாசுவை அங்குள்ள யாரென்றே தெரியா பேட்ஸ்மேன்கள் சரியாக சமாளிக்கிறார்கள் என்று லென்ந் மற்றும் லைன் சரியில்லை என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வீடியோ பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது.
இதே நேரத்தில் பும்ரா ஒருவேளை மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் பட்சத்தில் கண்டிப்பாக அது மிகவும் பெரிய உதவியாக இருக்கும். ஆனால் அவர் முன்பு செயல்பட்டது போன்றே இருக்க வேண்டும் இல்லை என்றால் கண்டிப்பாக அவனுடைய இடத்தை மற்ற பந்துவீச்சாகர்களிடன் இலக்க நேரிடும் என்பது குறிப்பிடதக்கது.