அவரை மட்டுமே குறை சொல்லாதீங்க.. உலக கோப்பையில் அசத்த போறோம் பாருங்க – பாக் முன்னாள் வீரர் அதிரடி.
நடந்து முடிந்த ஆசிய கோப்பை 2023 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டிக்கு வரும் என்று எதிர்பார்கப்பட்டது. ஏனென்றால் பாகிஸ்தான் அணியானது அப்போது ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 அணியாக உள்ளே வந்தது, மேலும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இர
நடந்து முடிந்த ஆசிய கோப்பை 2023 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டிக்கு வரும் என்று எதிர்பார்கப்பட்டது. ஏனென்றால் பாகிஸ்தான் அணியானது அப்போது ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 அணியாக உள்ளே வந்தது, மேலும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்தார். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சானது மிகவும் சிறப்பாக இருந்தது.
ஆனால் துரதிஷ்டவசமாக பாகிஸ்தான் அணியானது சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியிடம் தோற்று இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதனால் இலங்கை மற்றும் இந்திய அணிக்கு எதிராக நடத்த போட்டியில் இந்தியா அபாரமான வெற்றியை பதிவு செய்து ஆசிய கோப்பையை 8வது முறையாக இந்தியா வென்று சாதனை படைத்தது. இது இந்திய அணிக்கு வரும் உலக கோப்பை போட்டியில் ஒரு உத்வேகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மறுபுறம் இலங்கையிடம் தோல்வியை சந்தித்து பரிதாபமாக வெளியேறிய பாகிஸ்தான் அணிமீது பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஷாஹீன் அப்ரிடி போன்ற தரமான பவுலர்களை கொண்டிருப்பதால் பரம எதிரி இந்தியாவை அசால்டாக தோற்கடித்து பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டை சேர்ந்த முன்னாள் வீரர்கள் ஆரம்பத்தில் தெரிவித்தனர். ஆனால் இறுதி போட்டிக்கு கூட தகுதி பெறாமல் தோல்வியை சந்தித்தது.
அதுமட்டுமல்லாமல் பாபர் அசாம் மற்றும் சாகின் அப்ரிடி ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் சமீப காலங்களாகவே தோல்விகளை சந்தித்து வருவதால் பாபர் அசாமை நீக்கிவிட்டு பிஎஸ்எல் கோப்பையை வென்ற அனுபவமிக்க ஷாஹீன் அப்ரிடியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரலும் அந்நாட்டில் காணப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவேத் மியான்தத் இதற்கு கருத்து கூறியுள்ளார்.
அவர் கூறுகையில் “சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் இலங்கை போன்ற அணிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அணியினரும் சிறப்பாக செயல்படாத போது பாபர் அசாமை மட்டும் ஏன் குறை சொல்ல வேண்டும். முதலில் ஆசிய கோப்பையில் நமது அணி தோல்வியை சந்தித்ததால் நம்முடைய அணி மிகவும் மோசமானது என்று அர்த்தம் கிடையாது. ஏனெனில் உலகக்கோப்பையில் அசத்தும் அளவுக்கு நமது அணியில் திறமை வாய்ந்த பலர் இருக்கின்றனர்.
எனவே அங்கு அசத்துவதில் இனி கவனம் செலுத்த வேண்டும். ஒரே விஷயம் என்னவெனில் அதிக ரசிகர்களுக்கு முன்பு இந்திய சூழ்நிலைகளுக்கு விரைவாக உட்பட்டு நம்முடைய வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பது முக்கியமாகும். மேலும் உலகக் கோப்பைக்கான இறுதிக்கட்ட அணி அறிவிக்கப்பட்டதும் அந்த பெரிய தொடரில் நம்முடைய செயல்பாடுகள் சிறப்பாக மாறுவதற்கு துவங்கும் என்று கூறியுள்ளார் ஜாவேத் மியான்தத்