தோனியின் தலைமையின் கீழ் விளையாடியதால் அவருக்கு நிறைய அனுபவம் இருக்கும் – ஜிதேஷ் சர்மா ஓபன் டாக்.

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கான கட்டுப்பாட்டு வாரியம் BCCI ஜூலை 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சீனாவின் ஹாங்க்சோவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பல காலம் கழித்து விளையாடுகிறது. 2023 க்கான ஆசிய விளையாட்டு போட்டிகளானது வரும் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி முதல் ஆக்டோபர் 8ஆம்

By ·

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கான கட்டுப்பாட்டு வாரியம் BCCI ஜூலை 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சீனாவின் ஹாங்க்சோவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பல காலம் கழித்து விளையாடுகிறது. 2023 க்கான ஆசிய விளையாட்டு போட்டிகளானது வரும் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி முதல் ஆக்டோபர் 8ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய தன்னுடைய டி20 அணியை நேற்று அதிகார பூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இதே வேலையில் விளையாட்டு சாதனைகளில் உச்சமான ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை இணைக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது மும்பரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தான் இந்த வருடம் வரும் அக்டோபர் மாதம் உலக கோப்பை போட்டிகள் தொடங்குவதினால் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு இந்திய அணியை அனுப்பலாமா என்ற ஆலோசனையில் இருந்த நிலையில் தற்போது அங்கு செல்லும் இந்திய அணியை அறிவித்துள்ளது.

இந்த அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் இந்த அணியை ஷிகர் தவான் கேப்டனாக வழிநடத்துவார் என்றிருந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் சென்னனை அணிக்காக திறமையாக விளையாடிய தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு கேப்டனாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜிதேஷ் ஷர்மா பேட்டி :

இந்த நிலையில் தான் ஆசிய போட்டிகளுக்கு செல்லும் அணியில் இந்த வருட ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட ஜிதேஷ் ஷர்மாவும் இடம்பெற்றுள்ளார். அப்படிப்பட்ட நிலையில் தான் ஜிதேஷ் ஷர்மா தன்னுடைய கேப்டனான ருத்துராஜ் கெய்க்வாட் பற்றியும், இந்திய அணிய சீனாவில் சென்று விளையாடுவது பற்றியும் பேசியிருந்தார்.அவர் கூறியதாவது “இந்திய அணிக்காக விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

அதுவும் சிறு வயதில் ஆசிய போட்டிகளை டியில் என்னுடைய கிராமத்தில் இருந்து பார்த்தேன். இப்போது அங்கேயே சென்று பார்க்க போகிறேன் என்பது மிகுந்த மகிழ்ச்சி. நாங்கள் ஆசிய போட்டிகளில் விளையாட வெல்வது எங்களுடைய அதிர்ஷ்டம் என்றே நீங்கள் சொல்லலாம். எங்களுக்கு நம்பிக்கை ஒரு அணியாக இருந்து இந்தியாவை பெருமை பட வைப்போம். எங்களினால் எத்தனை முடியுமோ அத்தனை தங்க பதக்கங்களை நாங்கள் வென்று, சீனாவில் இந்திய தேசத்தின் தேசிய கீதத்தை படுவோம் என்றார் ஜிதேஷ் ஷர்மா

ருத்துராஜ் குறித்து ஜிதேஷ் :

மேலும் பேசினாய் அவர் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடுவது குறித்து பேசிய அவர் “அவர் மிகவும் அமைதியான மற்றும் தண்னை நிலைப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளக்கூடிய ஒரு மனிதர். ருத்துராஜ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். எனக்கு தெரிந்து அவர் ஒரு நல்ல தலைவராக இருப்பர். ஏனென்றால் அவர் தோனியின் கீழ் விளையாடியதால் கேப்டன்சி பற்றி அவருக்கு நல்ல ஒரு புரிதல் இருக்கும் என்றார் ஜிதேஷ் ஷர்மா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை