எங்களுக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்தால் அனைத்தையும் கொடுத்திருப்போம் – ஜோ ரூட் ஏமாற்றம்.
வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் போட்டியானது தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே மூன்ற டெஸ்ட் போட்டிகள் விளையாடிய நிலையில் நான்காவது போட்டியானது தொடங்கியது. தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா பின்னர் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து விளையாடிய இங்கிலந்து
வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் போட்டியானது தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே மூன்ற டெஸ்ட் போட்டிகள் விளையாடிய நிலையில் நான்காவது போட்டியானது தொடங்கியது. தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா பின்னர் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து விளையாடிய இங்கிலந்து அணி யாருமே எதிர்பார்க்காத வண்ணம் சிறப்பாக விளையாடி 592 ரன்களை விளாசியது.
இதனால் வெற்றி இங்கிலாந்து அன்னிக்கே அதிகம் என்றிருந்த நிலையில் இவர்களுக்கு இடையே மூன்றாவது அணியாக மழை குறுக்கிட்டது. இந்நிலையில் 4வது நாள் போட்டியானது மிகவும் தாமதமான ஆரம்பித்ததல் போட்டியும் தாமதமாக தொடங்கிகியது. இதனால் தடுமாறிய ஆஸ்திரேலிய அணிக்கு வாய்ப்பும் கிடைத்தது. மேலும் இந்த நேரத்தில் தேவையான ஓய்வு எடுத்துக்கொண்ட லபுசேன் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 111 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருந்த போதிலும் அணிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை சரியாக செய்து ரன்களை சேர்த்தார்.இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்கை சமன் செய்ய 61 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. மேலும் தற்போது களத்தில் மிட்செல் மார்ஸ் மற்றும் கேமரூன் க்ரீன் விளையாடி வருகின்ற்றனர். அதோடு நாள் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை எடுத்திருந்தது. நேற்றே மழை காரணமாக போட்டியானது பெருமளவு பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மழை தொடர்ந்து பெய்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தான் ஜோ ரூட் இது குறித்து பேசியிருந்தார். அவர் கூறுகையில் ” உண்மையிலேயே எங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்திருக்கலாம். மழை எங்களை சுற்றி ஒரு துணியை கட்டி சில கிரிக்கெட்டை விளையாடுவதை போன்றது. எங்களுக்கு தெரியும் மழை கொஞ்ச நேரம் கழித்து ஒரு காரணியாக இருக்கும் என்று. அது எங்களையே குறிவைத்து தாக்கியது போல தெரிந்தது.
நாங்கள் இந்த போட்டியில் மிகவும் வலுவான நிலையில் இருந்தோம் என்று நினைக்கிறேன் என்றார் ஜோ ரூட். மேலும் பேசிய அவர் இறுதி நாளில் மழை பெய்யாமல் கொஞ்சமாணவது அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்புகிறோம். இன்று அங்கு சென்று எங்களுக்கான வாய்ப்பைப் பெறாமல் இருந்தால் கொஞ்சம் அவமானமாக இருக்கும். எங்களினால் விளையாட முடித்தால் இறுதி விக்கெட்டுகளை எடுக்க எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருந்திருக்கும். நாங்கள் இந்த வாரம் முழுவதும் செய்தததை செய்திருந்தால் போதுமானதாக இருந்திருக்கும் என்றார் ரூட்.