பாகிஸ்தானை வீழ்த்தியது மறக்க முடியாத தருணம் – ஆஃப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஓபன் டாக்.
தற்போது நடந்து வரும் உலக கோப்பை தொடரானது இறுதி கடத்தை எட்டியுள்ளது. பல அணிகள் தற்போது அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறாத நிலையில் ஆப்கானிஸ்தானின் பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட் அகமதாபாத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 2023 உலகக் கோப்பை பயணத்தை திரும்பிப் பார்த்தா
தற்போது நடந்து வரும் உலக கோப்பை தொடரானது இறுதி கடத்தை எட்டியுள்ளது. பல அணிகள் தற்போது அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறாத நிலையில் ஆப்கானிஸ்தானின் பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட் அகமதாபாத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 2023 உலகக் கோப்பை பயணத்தை திரும்பிப் பார்த்தார்.
போட்டிக்கு பிந்தைய தனது இறுதி செய்தியாளர் சந்திப்பின் போது, சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான மறக்க முடியாத வெற்றியை, போட்டியின் சிறப்பான தருணமாக, அவர்களின் பிரச்சாரத்தில் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி டிராட் எடுத்துரைத்தார்.
அவர் கூறுகையில் “உங்களுக்குத் தெரியும், உண்மையான நல்ல வீரர்கள். அவர்கள் தங்களுடைய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதில் மிகவும் பெருமைப்படுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நான் அதை ரசிக்கிறேன், நான் அதை விரும்புகிறேன். நீங்கள் யார் நீங்கள் என்ன என்று பெருமைப்படும்போது.
ஒரு கிரிக்கெட் வீரராக மாறுவதற்கான சவால்கள் பல உள்ளன மற்றும் கடந்த காலத்தில் தனிப்பட்ட சவால்களை ஒரு பக்கத்தில் வைத்துக்கொண்டு போட்டி என்று வரும் போது அணிக்காக ஒரு பொதுவான குறிக்கோளுக்காகவும் விளையாட வேண்டும்.
கிரிக்கெட்டில் கடினமான சோதனை நேரங்கள் நிச்சயமாக உள்ளன. ஆனால் இந்த உலகக் கோப்பையில் நாங்கள் பெற்ற அந்த நான்கு வெற்றிகள், குறிப்பாக பாகிஸ்தானை முதல்முறையாக தோற்கடித்ததில் அவர்கள் முகத்தில் உள்ள மகிழ்ச்சி, எல்லாவற்றையும் பயனுள்ளதாக்குகிறது. அதனால் மற்ற வீரர்களுடன் சேர்ந்து நான் மறக்க முடியாத தருணம் அது என்றார் அவர்.
மேலும் பேசிய பங்களாதேஷ் அணிக்கு எதிராக பெற்ற தோல்வி குறித்தும் பேசினார். அவர் கூறுகையில் ” பங்களாதேஷுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த பிறகு நாங்கள் அதனை கண்டிப்பாக வெல்ல வேண்டிய அல்லது மிகவும் வெல்லக்கூடிய ஆட்டமாக பார்த்திருப்போம். ஆனால் இன்றும் இங்கே உட்கார்ந்து தோல்வியடைந்த சில போட்டிகளை பார்க்கும் போது அதில் கூட வென்றிருக்கலாம் என்று தோன்றுகிறது என்றார் அவர்.