நான் கேப்டனாக இருக்கலாமா? வேண்டாமா? என்று மேலிருப்பவர் தான் சொல்ல வேண்டும் – ஜோஸ் பட்லர்
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2023காண உலகக் கோப்பை ஆனது தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 25வது போட்டியில் நேற்று இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதியது. இங்கிலாந்து அணி கடைசியாக நடைப
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2023காண உலகக் கோப்பை ஆனது தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 25வது போட்டியில் நேற்று இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதியது. இங்கிலாந்து அணி கடைசியாக நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால் அவர்களுக்கு இந்த வருட உலக கோப்பையானது சரியாக வரவில்லை.
கடந்த இரண்டு போட்டிகளில் இருந்து தோல்வியிலிருந்து மீண்டு வர முயற்சி செய்து வருகின்றது. கடந்த போட்டியில் 220 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணியிடம் மாபெரும் தோல்வியை அடைந்தது. இந்நிலையில் இலக்கியுடன் மோதிய இங்கிலாந்து அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அதாவது இங்கிலாந்து அணி 32.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களுக்கு இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சுருண்டது
157 ரன்கள் இலக்காக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி வாய்ப்பு தேடித் தந்தனர். இதனால் நடப்பு சாம்பியன் ஆனா இங்கிலாந்து தற்போது அரையிறுதிக்கு வெல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டது. இந்நிலையில் இந்த தொடர் தொடங்கியது முதலே ஜோஸ் பட்லர் கேப்டன்சி குறித்து பலரும் விமர்சித்து வந்த நிலையில் அது குறித்து பேசியுலர் பட்லர்.
அவர் கூறுகையில் “ஒரு கேப்டனாகவும், தலைவராகவும், ஒரு வீரராகவும் என் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையும் நம்பிக்கையும் உள்ளது. வீரர்களின் சிறந்ததை எப்படிப் பெற்று அணியை சரியான திசையில் நகர்த்துவது என்று நீங்கள் எப்போதும் கேள்வி எழுப்புகிறீர்கள். நான் இன்னும் அணியின் கேப்டனாக இருக்க வேண்டுமா என்று கேள்வியெழுப்புகிறீர்கள் என்றால் இது எனக்கு மேலே உள்ளவர்களுக்கான கேள்வி என்றார் பட்லர்
மேலும் போட்டி முடிந்து பேசிய அவர் கூறுகையில் “இது ஒரு நம்பமுடியாத கடினமான மற்றும் நம்பமுடியாத ஏமாற்றமளிக்கும் போட்டியாகும். எங்களைப் பற்றிய ஒரு நல்ல கணக்கை நாங்கள் காட்டாதது எனக்கும் எங்கள் அணிக்கும் ஏமாற்றம் அளிக்கிறது. போட்டிக்கு ஆரம்பம் சரியாக இருக்கவில்லை. எங்களிடம் நிறைய அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர், அவர்கள் நிறைய அனுபவங்களைக் கொண்டுள்ளனர். நீங்கள் ஒரே இரவில் மோசமான வீரராக மாற மாட்டர்கள், மோசமான அணியாக மாற மாட்டர்கள்.
ஒரே இரவில், இது மிகப்பெரிய ஏமாற்றம் என்று நான் நினைக்கிறேன், நாங்கள் இதுவரை எங்களின் சிறந்த போட்டியை விட குறைவான அளவிற்கே இருந்து வருகிறோம் மற்றும் வெளிப்படையான காரணமின்றி. நாங்கள் செய்து கொண்டிருக்கும் தவறுகளை எங்களிடமிருந்து வழக்கமாக நீங்கள் பார்க்க முடியாது. நாங்கள் அடிப்படை விஷயங்களில் சரியாகச் செயல்படவில்லை. அடுத்த போட்டிகளில் என்ன நடந்தாலும் சரி முன்னோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும்!” என்று கூறி இருந்தார்.