வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இருந்த போது தனி ஒரு மனிதராக அணியை சுமந்த ஜோஸ் பட்லர். கடைசி பந்தில் த்ரில் வெற்றி

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் இன்று 31வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் இன்று 31வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இதற்க்கு முன்பு ராஜஸ்தான் அணி ஒரு போட்டியில் மட்டும் தோல்வியை தழுவியும் அதே போல் கொல்கத்தா அணியும் ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வியை தழுவி இன்றைய போட்டியில் மோதியது.

இதில் தாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி ஆரம்பத்தில் இருந்தே தங்களது அதிரடியை காட்ட தொடங்கினார்கள். அதிலும் தொடக்க வீரராக களமிறங்கிய சுனில் நரேன் நான்கு பக்கமும் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு வானவேடிக்கை காட்டி இருந்தார். இந்த போட்டியில் அவர் தனது முதல் சதத்தை அடித்து இருந்தார். இந்த போட்டியில் அது மட்டுமல்லாமல் ipl வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் மற்றும் சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்

கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக சுனில் நரேன் 109 ரன்களும் ரகுவன்ஷி 30 ரன்களும் ரிங்கு சிங் 20 ரன்களையும் அடித்து இருந்தார். ராஜஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சாளர்கள் சற்று சுமாராக தான் செயல் பட்டு இருந்தார்கள் ஆவேஸ் கான் மற்றும் குல்தீப் சென் தலா இரண்டு விக்கெட்டுகளையும் சஹல் மற்றும் போல்ட் தலா ஒருவிக்கேட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். எனவே கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை குவித்தது.

அதன் பின் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என நிலையில் இருந்த போது சதமடித்து ராஜஸ்தான் அணியை வெற்றி பெறவைத்தார் பட்லர். கடைசி பந்துவரை சென்ற இந்த போட்டியில் அவர் தனது அணிக்காக சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். ராஜஸ்தான் அணியின் அதிகபட்சமாக பட்லர் 106 ரன்களையும் பராக் 36 ரன்களையும் பவல் 26 ரன்களையும் அடித்து இருந்தார். இதில் கடைசி பந்துவரை போராடிய பட்லர் தனது சதம் முக்கியம் அல்ல அணியின் வெற்றி தான் முக்கியம் என சதத்தின் போது எந்த ஒரு கொண்டாட்டத்திலும் அவர் ஈடுபடவில்லை

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை