“இது ஒரு எதிர்பார்க்காத தோல்வி. நாங்க இதை அங்கு செய்து இருக்க கூடாது” – கேப்டன் ஜாஸ் பட்லர்.
உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். நேற்றறைய 2 வது போட்டியில் இங்கிலாந்து அணியும் தென்னாபிரிக்கா அணியும் மும
உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். நேற்றறைய 2 வது போட்டியில் இங்கிலாந்து அணியும் தென்னாபிரிக்கா அணியும் மும்ன்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இரண்டு அணிகளும் கடந்த தோல்வியில் இருந்து மீண்டு வரவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பௌலிங் செய்ய விரும்பியது. ஆனால் அது அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 5௦ ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 400 ரன்களை குவித்தது. தென்னாபிரிக்கா அணியின் சார்பில் கிளாசென் 109 ரன்களும், ரீசா ஹென்ட்ரிக்ஸ் 85 ரன்களும், ஜான்சன் 75 ரன்களையும் குவித்தனர்.
இங்கிலாந்து அணியின் பௌலிங்கை தென்னாபிரிக்கா அணி நான்கு பக்கமும் சிதற அடித்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஆர் டாப்லி 3 விக்கெட்டுகளையும் கஸ் அட்கின்சன் மற்றும் அடில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் தேவையான நேரங்களில் விக்கெட்டுகளை எடுக்காமல் சொதப்பினர்.
400 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்து விக்கெட்டுகளை இழந்து வந்தனர். 1௦௦ ரன்கள் இருந்த நிலையிலே 8 விக்கெட்டுகளை இழந்தனர். இங்கிலாந்து அணி 22 ஓவர் முடிவில் 1௦ விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் விதியசாரத்தில் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி சார்பில் மார்க் வூட் 45 ரன்களும், கஸ் அட்கின்சன் 35 ரன்களும் ஹாரி ப்ரூக் 17 ரன்னிலும் ஜாஸ் பட்லர் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தென்னாபிரிக்கா அணி சார்பில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் மற்றும் லுங்கி என்கிடி தலா இரண்டு விக்கெட்டுகளையும் ராபாடா மற்றும் மகாராஜ் தலா 1 விக்கெட்டையும் எடுத்து இங்கிலாந்து அணியை சுருட்டினர்.
ஜாஸ் பட்லர் கூறியது:
இது ஒரு நம்பமுடியாத ஏமாற்றம். நன்றாக விளையாடுவோம் என்ற நம்பிக்கையுடன் வந்தோம், ஆனால் நாங்கள் குறைவாக இருந்தோம், நன்றாக அடிக்கப்பட்டோம். மாற்றங்கள் பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை. முதல் இன்னிங்ஸ் முழுவதும், பல விஷயங்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை. டாப்லி காயம் அடைந்தார், அவர் திரும்பி வருவாரா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை, சில ஓவர்கள் அந்த மாதிரியான விஷயங்களைப் பெறுவார்.
50 ஓவர்கள் கடினமாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் அவர்களை 340-350 ரன்களில் கட்டுப்படுத்தினால், அது ஒரு நல்ல துரத்தலாக இருந்திருக்கும், ஆனால் அவர்கள் வெளியேறினர். முதலில் பந்துவீசுவது தவறு. அதுபோன்ற ஸ்கோரைத் துரத்திச் செல்லும் பேட் மூலம் நாங்கள் நல்ல தொடக்கத்தைப் பெற வேண்டியிருந்தது. இங்கு நடக்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும் நாம் வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார்.