“என் மேல் நம்பிக்கை வைத்ததற்கு மிகவும் நன்றி சார்” x தளத்தில் உருக்கமாக பதிவேற்றிய ஜுரேல்
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். அதில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணி முதலில் இருந்து வருகிறது. இன்று நாலாவது போட்டியானது ராஞ்சியில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. இதில்
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். அதில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முதலில் இருந்து வருகிறது. இன்று நாலாவது போட்டியானது ராஞ்சியில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருந்தது.இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்களை அடித்து இருந்தது.
அதன்பின் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பத்தில் சற்று சொதப்பல் இருந்தாலும் அதன் பின் ஜுரெலின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி 307 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது அதில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஜுரேல் 90 ரன்களிலும் ஜெய்ஸ்வால் 73 ரன்களையும் கில் 38 ரன்கள் அடித்திருந்தனர். இன்றைய நாளிலே மீண்டும் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணி 145 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் க்ராலி 60 ரன்களையும் அடித்திருந்தனர். இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அவர்கள் இன்றைய நாளிலே 145 ரன்னில் அனைத்து விக்கெட் இழந்தனர் இதில் ரவிச்சந்திர அஷ்வின் 5 விக்கெட்டுகளையும் குல்திப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும் ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். மீண்டும்நேற்றைய நாளிலே பேட்டிங் செய்வது இந்திய அணி 40 ரன்கள் எடுத்து விக்கெட்டுகளை இதுவரை எதுவும் இழக்காமல் நேற்று முடிந்தது.
இன்று ஆரம்பத்தில் இங்கிலாந்து அணியின் பக்கம் போட்டி சென்றாலும் இந்திய அணி இறுதியில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இதன் மூலம் இந்திய அணி இந்தியாவில் நடந்த 17 தொடர்களையும் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது. அது மட்டும் அல்லாமல் கடந்த 10 வருடங்களுக்கு பிறகு 150 ரன்களுக்கு இருந்த இலக்கை இந்திய அணி இன்று தான் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஜுரேல் 129 ரன்களை அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு துணையாக இருந்தார்.
இது குறித்து துருவ் ஜுரேல் கூறுகையில், சூழ்நிலையின் தேவைக்கேற்ப விளையாடுகிறேன். முதல் இன்னிங்ஸிலும், நாங்கள் ரன்களைப் பெற வேண்டும், நாங்கள் கடைசியாக பேட் செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும், அதனால் எந்த ரன்களும் முக்கியமானதாக இருக்கும். நான் சில பார்ட்னர்ஷிப்களில் ஈடுபட்டிருந்தேன், அதனால் தங்கி ரன் சேர்த்த அனைவருக்கும் கடன் சேரும். நான் பந்தைப் பார்த்தேன், வெகுதூரம் முன்னோக்கி யோசிக்கவில்லை.
Thank you Rohit bhaiya, Rahul sir for believing in this boy 🙏🇮🇳❤️ pic.twitter.com/pBlojvB10p
— Dhruv Jurel (@dhruvjurel21) February 26, 2024
கில்லுடன் பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது. அதன் பின்னர் அவர் என்னை நம்பியதற்கு நன்றி ரோகித் அண்ணா, ராகுல் சார்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற துருவ் ஜுரேல் X தளத்தில் பதிவு செய்து இருந்தார்.