திடீரென மைதானத்திற்க்குள் நுழைந்த போராட்ட காரர்கள். அலேக்காக தூக்கி சென்ற ஜானி பேர்ஸ்டோவ் – வீடியோ உள்ளே.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக சாம்பியன் ஷிப் 2023 போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்த கையோடு தற்போது ஆஷஸ் தொடரில் ஆடி வருகிறது இங்கிலாந்து அணி. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஆஷஸ் தொடரின் முதல் போட்டியான

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக சாம்பியன் ஷிப் 2023 போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்த கையோடு தற்போது ஆஷஸ் தொடரில் ஆடி வருகிறது இங்கிலாந்து அணி. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஆஷஸ் தொடரின் முதல் போட்டியானது சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 393 ரன்களை எடுத்து டிக்ளேர் கொடுத்தது. அதற்கு பிறகு ஆஸ்திரேலியா 386 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்கை விளையாடிய இங்கிலாந்து தடுமாறி 273 எடுத்த நிலையில் 281 ரங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா தடுமாறினாலும் இறுதியில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 2023 ஆஷஸ் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இங்கிலாந்தின் இந்த தோல்விக்கு அவசரப்பட்டு டக்ளர் செய்த்தே காரணம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இன்று ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது போட்டியானது தொடங்கியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று இங்கிலாந்து பந்துவீச முடிவு செய்த்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா சிறப்பான தொடர்க்கத்தை கொடுத்துள்ளது. கடந்த போட்டியில் பிரமாதமாக விளையாடிய உமேஷ் கவாஜா 17 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 66 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 79 ரன்களை அடித்துள்ளது.

மைதானத்திற்குள் நுழைந்த நபர்கள் :

இதனிடையே இந்த போட்டியின் போது முதல் ஓவர் முடிவடைந்த நிலையில் திடீரென இருவர் கையில் ஆரஞ்சு நிற பொடியுடன் மைதானத்திற்குள் நுழைந்தனர். அவர்களின் ஒருவரை மைத்தனத்தின் பாதுகாப்பு குழுவினர் பிடித்து விட்டனர். மற்றொருவரை விக்கெட் கீப்பரான ஜானி பேர்ஸ்டோவ் துரத்தி பிடித்து அலேக்காக தூக்கி கொண்டு மைதானத்தின் எல்லையில் உள்ள பாதுகாப்பாளர்களிடம் விட்டு வந்தார்.

மேலும் ஜானி பேர்ஸ்டோவ் சட்டையில் ஆரஞ்சு நிறத்தில் கலர் பரவியத்தினால் அவர் தன்னுடைய மேலையடை மாற்றி மீண்டும் போட்டிக்கு திரும்பினார். இதனால் போட்டியானது சிறிது நேரம் பாதிக்கப்பட்ட பின்னர் மீண்டும் போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிடிபட்ட அந்த இரண்டு போராட்ட காரர்களின் JUST STOP OIL போராட்ட நோக்கத்தை கொண்டார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் போலீஸ் 3பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

JUST STOP OIL என்ற போராட்ட காரர்கள் லண்டனில் புதிய எரிவாயு, எண்ணெய், நிலக்கரி போன்ற திட்டங்கள் ரத்து செய்ய வேண்டும் என்று போராடி வருபவர்கள். அப்படி பல போராட்ட காரர்களின் இவர்கள் இருவரும் ஒருவர். இதோ போன்று கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜார்விஸ் என்ற நபர் டெஸ்ட் உடையை அணிந்து கொண்டு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அட்டுழியம் செய்தது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை