விராட் கோலியின் சாதனையை பாபர் அசாம் முறியடிப்பார் – பாக் வீரர் கம்ரான் அக்மல் கணிப்பு.

உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சில

By ·

உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சிலர் மட்டுமே இந்திய அணியில் அதிக காலம் நீடித்து நிலையாக இருக்க முடிகிறது. அந்த வகையில் ஒருவரை கூற வேண்டும் என்றால் விராட் கோலியை கூறலாம்.

கடந்த பல வருடங்களாக சிறப்பாக விளையாடி வரும் இவர் உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரன் மெஷின் என்று பாராட்டும் அளவிற்கு பல சாத்தனைகளை படைத்து வருகிறார். இந்த நிலையில் தான் தற்போது நடந்து வரும் உலக கோப்பை தொடரில் விராட் கோலி ஒரு அதிரடி வீரராக செயல்பட்டு வருகிறார். மேலும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை 100 சதம் சாதனையையும் முந்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அதன் முதன் படியாகத்தான் விராட் விராட் கோலி கடந்த அரையிறுதி போட்டியின் போது சரித்திர சாதனை படைத்தார். அதாவது ஒருநாள் போட்டியில் 49 சதங்களை விளாசிய கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்டும் சச்சின்டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து 50 ஒருநாள் சதங்கள் என்ற ஒரு புது சாதனையை படித்தார் விராட் கோலி.

மேலும் இந்த சாதனையை முறியடிக்க இன்னமும் பல காலங்கள் ஆகும் என்பதில் சந்தேமே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு சாதனையை படித்துள்ளார் விராட் கோலி. இந்த நிலையில் தான் சமீபத்தில் உலக கோப்பை போட்டியில் இறுதி வெளியேறிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் அவர் விராட் கோலியின் சாதனையை முறியடிப்பார் என்று கூறியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல்.

அவர் கூறுகையில் “முதல் மூன்று இடங்களில் விளையாடும் பேட்டர்களால் மட்டுமே விராட் கோலியின் சாதனையையான ஒருநாள் போட்டியில் எடுத்த 50 சதங்கள் என்ற சாதனையை முறியடிக்க முடியும், மிடில் ஆர்டரால் அதை முறியடிக்க முடியாது. விராட் கோலியின் சாதனையை பாபர் அசாம் உடைக்க முடியும். மேலும் சாதனையைத் துரத்தக்கூடிய சுப்மான் கில் இந்தியாவிடம் இருக்கிறார் என்றார் கம்ரான் அக்மல்.

மேலும் பாபர் அசாம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஷாகின் ஷா அப்ரிடி கூறுகையில் “உங்கள் முன்மாதிரியான தலைமையின் கீழ், உண்மையான குழுப்பணி மற்றும் தோழமைக்கு சாட்சியாக இருப்பது ஒரு பாக்கியம். உங்கள் முன்னணி தலைமைத்துவம் மற்றும் அணியின் ஒற்றுமை, கூட்டு வெற்றிக்கான அர்ப்பணிப்பு ஆகியவை பாராட்டுக்குரியவை. நீங்கள் இன்னும் அதிகமான பேட்டிங் சாதனைகளை முறியடிப்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை