இந்தியா ஜெயிச்சது போல டான்ஸ் ஆடுறீங்க – இர்பான் பதான் மீது முன்னாள் பாக் வீரர்கள் விமர்சனம்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணியானது சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணியானது சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்வது அவர்களுக்கு சாதகமாகவே அமைந்தது.

நீண்ட நாட்களாக தடுமாறி வந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் இந்த போட்டியில் அவருடைய சிறப்பான பேட்டிங்கின் மூலம் 50 ஓவர்களில் 282 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணியின் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 74 ரன்களும், ஷபீக் 58 ரன்களும், இப்திகார் அகமது 40 ரன்களும் குவித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்களை குவித்தது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நூர் 3 விக்கெட்டுகளையும் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளையும் நபி மற்றும் அஹமதுல்லா தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். 283 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கத்தில் நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவரிலே மாபெரும் வெற்றியை அடைந்தது.

இந்த தோல்விக்கு காரணம் பாகிஸ்தான் அணியின் மோசமான பீல்டிங் தான். இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு ஆப்கானிஸ்தான் அணியின் ரசிகர்களும் வீரர்களும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். அங்கு வர்ணனை செய்து கொண்டு இருந்த இர்பான் பதான் ரஷித் கானுடன் மைதானத்தில் நடனமாடினர். அப்படி நடனமாடியது சோசியல் மீடியாவில் வைரலாகிய நிலையில் அதற்கு கண்டனங்களும் எழுந்த நிலையில் தான் முன்னாள் பாகிஸ்தான் அணியின் வீரர் கம்ரான் அக்மல் இது குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசுகையில் “இர்பான் பதான் நடனம் ஆடியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது எனக்கு நினைவிருக்கிறது. அப்போதும் இந்த மாதிரி சந்தோஷம் தென்படவில்லை. ஆனால் பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் தோற்கடித்ததில் அதிக மகிழ்ச்சி தெரிகிறது. பார்க்க வருத்தமாக இருந்தது, இது எனக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் தான். நடுநிலை வர்ணனையாளர்கள் இதைச் செய்யக்கூடாது. ஒளிபரப்பாளர்கள் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றார் கம்ரான் அக்மல்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் அணியின் வீரர் அசார் அலி கூறுகையில் “அன்று பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் தான் வீழ்த்தியது, இந்தியா ஒன்றும் வீழ்த்தவில்லை. இர்பான் பதான் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவரா? வர்ணனையாளர்கள் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்று கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை