ஏற்கனவே சிறப்பாக ஆடுபவரை பின்னுக்கு தள்ளினால் எப்படி அசத்த முடியும் – தேர்வாளர்களை கடுமையாக விமர்சித்த பாக் வீரர்
இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பலர் இருந்தும் அணிக்கு தேவையான ஒருவர் இன்னமும் கிடைக்காமல் தவித்து வருகிறது. குறிப்பாக தோனி ஓய்வு பெற்றவுடன் அவருடைய இடத்தை ஸ்ரேயாஸ் இயற் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் திறமையாகவே சமாளித்தனர். தேவைப்படும் நேரத்தில் ரன்களும் ஸ்டெம்புகளுக்கு பின்னர் வி
இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பலர் இருந்தும் அணிக்கு தேவையான ஒருவர் இன்னமும் கிடைக்காமல் தவித்து வருகிறது. குறிப்பாக தோனி ஓய்வு பெற்றவுடன் அவருடைய இடத்தை ஸ்ரேயாஸ் இயற் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் திறமையாகவே சமாளித்தனர். தேவைப்படும் நேரத்தில் ரன்களும் ஸ்டெம்புகளுக்கு பின்னர் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்ட அவர்கள் இருவரும் தற்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறினார்கள்.
இந்நிலையில் தற்போது இந்தியாவிற்கு விக்கெட் கீப்பர்களின் இடத்தில் இருப்பவர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான். இவர்கள் இருவரையும் வைத்து இந்திய அணியானது சோதனை செய்து வருகிறது. ஆனால் இந்த சோதனை தவறாக நிசாகப்படுவதாக வருகிறார் பாஸ்கிதான் வீரர் கம்ரான் அக்மல். ஏனென்றால் முதல் சோதனையாக ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா 7வது இடத்தில் களமிறங்கிய போது இனியா தோல்வியை கழுவியது.
அதே போல டி 20 தொடரில் 3வது 4 வது இடத்தில் களமிறங்கும் சஞ்சு சாம்சனை 6வது இடத்தில் களமிறங்கியதால் அவர் அழுத்தம் காரணமாக ஆட்டமிழந்தார். இதனை சுட்டிக்காட்டி பேசியுள்ளார் காம்ரான் கூறுகையில் “போட்டியில் சேசிங் செய்ய வந்த போது இந்திய அணியின் கேப்டன், பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகம் அதீத தன்னம்பிக்கையுடன் களமிறங்கியது போன்று எனக்கு தெரிகிறது. குறிப்பாக இதெல்லாம் ஒரு இலக்கா என்ற நினைத்தார்களா என்று தெரியவில்லை
எந்த இலக்காக இருந்தாலும் நீங்கள் திட்டமிட வேண்டும். மேலும் அணியில் இருக்கும் வீரர்கள் கம்பேக் கொடுக்கிறார்களா அல்லது ஏற்கனவே அணியில் இருக்கிறார்களா என்பதற்கேற்றார் போல் அவர்களுடைய இடத்தை வழங்க வேண்டும். அந்த வகையில் சஞ்சு சாம்சன் எப்போதாவது 6வது இடத்தில் ஐபிஎல் போட்டியில் விளையாடி இருக்கிறாரா? 4 இடத்தில் விளையாடும் அவருக்கு அங்கேயே வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்.
மேலும் ரோகித் சர்மா, விராட் கோலி இல்லாத போது அவரை போன்ற அனுபவம் உள்ள வீரருக்கு நீங்கள் டாப் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பை கொடுக்க வேண்டும். மாறாக ஒருநாள் தொடரின் ஒரு போட்டியில் 6வது இடத்தில் விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்ததால் மீண்டும் அதை செய்வார் என்ற எண்ணத்துடன் நீங்கள் அவரை அங்கே களமிறக்கினீர்கள். ஆனால் அது ஒவ்வொரு முறையும் வெற்றிகரமாக அமையாது.
அந்த போட்டியில் திலக் வர்மா அறிமுகமாக வாய்ப்பை பெற்று அல்சாரி ஜோசப்புக்கு எதிராக அசத்தலாக செயல்பட்டார் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அந்த இடத்தில் விளையாட சஞ்சு தான் சரியானவர். ஏனெனில் தொடரை வென்ற பின் வேண்டுமானால் நீங்கள் இளம் வீரர்களுக்கு புதிய வாய்ப்பை கொடுக்கலாம். அதை செய்யாத நீங்கள் ஏற்கனவே அணியில் இருப்பவரை பின்னுக்கு தள்ளி புதியவருக்கு வாய்ப்பு கொடுத்தால் எப்படி அசத்த முடியும்.