“பேட் பிடிக்கவே கஷ்டமா இருந்துச்சி” வெற்றிக்கு பின் காயம் குறித்து பேசிய கேன் வில்லியம்சன்.

பேட் பிடிக்க கடினமாக இருந்தது. வெற்றி குறித்து பேசிய கேன் வில்லியம்சன். உலகம் முழுவதும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்த 2023 காண ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. அந்த வகையில் இன்று நடந்த பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியும் பங்களாத

By ·

பேட் பிடிக்க கடினமாக இருந்தது. வெற்றி குறித்து பேசிய கேன் வில்லியம்சன். உலகம் முழுவதும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்த 2023 காண ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. அந்த வகையில் இன்று நடந்த பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியும் பங்களாதேஷ் அணியும் மோதின. பங்களாதேஷ் அணி இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வி எனவும் நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் இரண்டு வெற்றியும் பெற்று இரண்டாவது இடத்திலிருந்து வருகின்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி அருமையாகவும் பந்து வீசினார்கள். பங்களாதேஷிற்கு ஆரம்பமே தடங்கலாக முதல் பந்தியிலேயே லிட்டன் தாஸ் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின் நிதானமாக விளையாடி வந்த தன்சித் ஹசன் 16 ரன்களிலும்.மெஹிதி ஹசன் மிராஸ் 30 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினர். அது பங்களாதேஷ் எனக்கு மிகவும் சோகமாக மாறியது.

அதன் பின்வந்த ஷாண்டோ 7 ரன்களில் வெளியேறினார். அணியின் கேப்டன் ஷாகிப் 40 ரன்களிலும் முஸ்தஃபீர் ரஹீம் நிதானமாக விளையாடி 66 ரன்களை அடித்தனர். அதன் பின் வந்த அனைத்து பேட்ஸ்மேன்களும் வந்த வேகத்திலே வெளியேற மஹ்முதுல்லாஹ் 41 ரன்கள் குவித்தார். பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் மட்டுமே குவித்தது.

246 ரன்கள் இலக்காக கொண்டு களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் அரசின் ரச்சின் ரவீந்திர 9 ரன்கள் அவுட் ஆகி வெளியேற ரசிகர்களை ஏமாற்றினார்.நிதானமாக விளையாடி வந்த கான்வே 45 ரன்களை அடித்து அணிக்கு வலு சேர்த்தார். காயத்தில் இருந்து மீண்டு வந்த கேன் வில்லியம்சன் தன்னுடைய அரை சத்தத்தை பூர்த்தி செய்தார்.

பங்களாதேஷ் அணி அவர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் திணறி வந்தனர். கேன் வில்லியம்சன் உடன் இணைத்த மிட்செல் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சை நான்கு திசைகளிலும் சிதறடித்தனர். 78 ரன்கள் இருந்த நிலையில் காயம் காரணமாக வெளியிரினார். அதன் பின் தான் மிட்செல் தனது அதிரடியை காட்ட தொடங்கினார்.

கேன் வில்லியம்சன் கூறியது:

எனக்கு பேட்டை பிடிப்பது கொஞ்சம் கடினமாக இருந்தது. முதல் பாதியில் பந்து வீச்சில் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டோம். கூட்டனி உருவாக்கி அதை ஆழமாக எடுத்துச் செல்வது நன்றாக இருந்தது. பவர்பிளேயின் நடுவில் கொஞ்சம் கடினமாகத் தாக்கலாம் என்று நினைத்தோம். நல்ல போட்டி விக்கெட். உண்மையில் நல்ல டீம் உழைப்பு. லாக்கி சிறப்பாக செயல் பட்டர். சீம் பந்துவீச்சாளர்கள் மிகவும் திறமையாக இருந்தனர். இது சிறந்த குழுவின் செயல்திறன். மிட்செல் ஒரு சிறந்த பங்களிப்பு அளித்தார். என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை