அவரது உடல் கடினமாக உழைக்க ஒத்துழைக்கவில்லையா? ஹர்திக் பாண்டியாவை ஓபனாக விமர்சித்த கபில் தேவ்.

கிரிக்கெட்டி போட்டிகளை பொறுத்தவரையில் ஆல் ரவுண்டர்கள் மிகவும் முக்கியமான வீரார்கள். ஏனென்றால் அவர்களினால் தேவைப்படும் போது எக்ஸ்ட்ரா பந்துவீச்சாளராகவும், பேட்ஸ்மேனாகவும் செயல்பட முடியும். ஆனால் கபில் தேவிற்கு பிறகு சிறந்த ஆல்ரவுண்டரா பெரிதாக யாரும் கிடைக்கவில்லை. சொல்லப்போனால் ஆல

By ·

கிரிக்கெட்டி போட்டிகளை பொறுத்தவரையில் ஆல் ரவுண்டர்கள் மிகவும் முக்கியமான வீரார்கள். ஏனென்றால் அவர்களினால் தேவைப்படும் போது எக்ஸ்ட்ரா பந்துவீச்சாளராகவும், பேட்ஸ்மேனாகவும் செயல்பட முடியும். ஆனால் கபில் தேவிற்கு பிறகு சிறந்த ஆல்ரவுண்டரா பெரிதாக யாரும் கிடைக்கவில்லை. சொல்லப்போனால் ஆல் ரவுன்டராக கலக்கிய யூசப் பதான் விரைவாகவே கிரிக்கெட்டை விட்டு செல்ல அடுத்ததாக ஹர்திக் பாண்டியா வந்தார்.

ஆனால் அவரும் காயம் காரணமாக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஆனாலும் அவரினால் மேலும் எவ்வளவு காலம் இப்படியே தாக்குப்பிடிக்க முடியும் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

கபில் தேவ் கூறியது :

இந்த நிலையில் இந்திய அணியில் மிகவும் தேவைப்படும் இந்த விஷயம் குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ். அவர் கூறியது “சாஸ்திரியின் கூற்றை நான் மதிக்கிறேன். ஆனால் டென்னிஸ் லில்லியை விட வேறு யாரும் அதிகமான காயங்களை சந்தித்தது இல்லை. அப்படி காயம் அடைந்தும் அவர் மீண்டும் வந்தார். அதனால் நான் அதை நம்பவில்லை. மனித உடல் எந்த நிலுயில் திரும்பலாம், மீண்டும் மேல் நிலைக்கு வரலாம்.

ஹர்திக் பாண்டியா சிறந்த வீரர் என்று நீங்கள் சொன்னால், அவரது உடல் பழைய நிலைக்கு திரும்பி வர கடினமாக உழைக்க வேண்டும். ஏன் அவரது உடலால் அதை செய்ய முடியவில்லையா? இன்று உங்களிடம் டி20 போட்டிகள் உள்ளன, உங்களுக்கு ஒருநாள் போட்டிகள் உள்ளன, உங்களுக்கு டெஸ்ட் போட்டிகள் உள்ளன, உங்களுக்கு மற்ற கிரிக்கெட்டுகளும் உள்ளன, உங்களுக்கு விளம்பரங்களும் உள்ளன என்று சிரித்தபடி கூறினார் கபில் தேவ்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “நான் கடைசியாகச் சொல்வதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று நினையாதேன். எங்கள் காலத்தில் கிரிக்கெட் மட்டுமே இருந்தது. அதனால் எங்களினால் நல்ல ஆல்ரவுண்டர்களாக வர முடிந்தது.றவந்தார்களாக. ஆல்ரவுண்டராக இருப்பது எளிதான வேலை அல்ல. அனைத்து வகையான கிரிக்கெட்டையும் விளையாடுவதும் எளிதான வேலை அல்ல. ஆனால் சில வீரர்களினால் விளையாட முடியும்.

நான் பர்த்ததில் இர்பான் பதான் அதைச் செய்வதற்கு மிகவும் நெருங்கி வந்ததாக நான் நினைத்தேன். ஆனால் அவர் மிக வேகமாக கிரிக்கெட்டில் இருந்து மறைந்து விட்டார். ஹர்திக் பாண்டியாவும் அப்படித்தான். அவரால் சிறந்த ஆல்ரவுண்டராக் வர முடியும் என்று நான் சொல்ல விரும்புகிறேன். அவர் கடினமாக உழைத்தால் அது கண்டிப்பாக நடக்கும், அப்படி செய்யவில்லை என்றால் முடியாது என்றார் கபில் தேவ்.

மேலும் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகியோரை பற்றி பேசிய அவர், நாம் அவர்கள் இருவரையும் ஆல்ரவுண்டர்களாக எண்ணவில்லை. தோனி ஒருநாள் போட்டிகளில் பேட்டிங்கில் 50க்கு மேல் சராசரியாக வைத்துள்ளார். சிறந்த கேப்டனும் சிறந்த விக்கெட் கீப்பரும் ஆவர். ஏன் நாம் அடுத்த தோனி எப்போது கிடைப்பார் என்று சொல்லக்கூடாது என்றார் ஹர்திக் பாண்டியா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை