வெஸ்ட் இண்டீஸ் இல்லாத உலக கோப்பையை பார்க்க கஷ்டமாக இருக்கிறது – கபில் தேவ் உருக்கம்.

உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை ஒருநாள் போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் விளையாடும் அணிகளுக்கு ஏற்கனவே அட்டவணையானது வெளியிடப்பட்ட நிலையில். அதில் கலந்துகொள்ளும் 2 அணிகளுக்கான உலக கோப்பை தகுதி சுற்றானது ஜிம்

By ·

உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை ஒருநாள் போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் விளையாடும் அணிகளுக்கு ஏற்கனவே அட்டவணையானது வெளியிடப்பட்ட நிலையில். அதில் கலந்துகொள்ளும் 2 அணிகளுக்கான உலக கோப்பை தகுதி சுற்றானது ஜிம்பாப்வேவில் நடைபெற்றது. ஆனால் அந்த குவாலிபயர் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது மோசமான தோல்வியை சந்தித்தது.

இதனால் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது 146 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக உலக கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேறியது. இது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது மட்மல்லாமல் அவர்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது உலக கோப்பையில் இருந்து வெளியேறிய நிலையில் முன்னணி வீரர்கள் பலரும் தங்களுயை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் தான் கடந்த 1983ஆம் ஆண்டு இந்தியாவிற்கு உலக கோப்பையை வாங்கி கொடுத்த இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பை 2023ல் இருந்து வெளியேறியது குறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

கபில் தேவ் கூறியது :

அவர் கூறுகையில் “வெஸ்ட் இண்டீஸ் அணியானது வரும் உலக கோப்பபை போட்டியில் விளையாடாதது எனக்கு மிகவும் மனதிற்கு வலியாக இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் இல்லாமல் என்னால் உலக கோப்பை போட்டியை நான் நினைத்து பார்க்க முடியவில்லை. அவர்கள் இத்தனை காலம் பல சிறப்பான வீரர்களை உருவாக்கி இருந்தார்கள். அவர்களை எந்த விஷயம் வருத்தப்பட வைக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர்கள் தடைகளை உடைந்து மீண்டும் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார் கபில் தேவ்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பைக்கு தகுதி பெறாதது குறித்து சமீபத்தில் Trinidad and Tobago நாட்டின் பிரதமர் மிகவும் அதிர்ப்தி தெரிவித்திருந்தார். அவர் கூறியதாவது “இன்று நான் மிகவும் மோசமான ஒரு கிரிக்கெட்டை வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியதை பார்த்தேன். சங்கடம் நிறுத்தப்பட வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவதற்கு போராட வேண்டும், நம்ப வேண்டும், வெற்றி பெற வேண்டும். தோற்கடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியானது தங்களுடைய வரலாற்றில் இந்த மோசமான நேரத்தில் இருந்து வெளியில் வர கடுமையாக முயற்சி செய்து வருகிறது. அதன் ஆரம்பமாக இந்தியாவுடன் நடந்த டெஸ்ட் போட்டியில் 0- 1என்ற கணக்கில் தோல்வியை தழுவிய நிலையில் அடுத்து ஒருநாள் போட்டியானது நாளை தொடங்க இருக்கிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை