உலக கோப்பை இருக்கட்டும்..அரையிறுதிக்கு வாருங்கள் முதலில் – இந்திய வீரர்களை கடுமையாக விமர்சித்த கபில் தேவ்.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்குகிறது. கடந்த 2011 உலககோப்பை போல இந்த முறையும் வென்று 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்தியா. இதன
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்குகிறது. கடந்த 2011 உலககோப்பை போல இந்த முறையும் வென்று 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்தியா. இதனிடையே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அடிக்கடி இந்திய அணியின் வீரர்கள் குறித்து விமர்சித்து வருகிறார்.
சமீபத்தில் கூட தற்போது உள்ள வீரட்ர்ல் விளமபிராங்களில் நடிப்பதினால் பணம் வருகிறது என்றும் அப்படி பணம் வரும் போது ஆணவமும் வருவதாக அவர் குறி கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு ஜடேயாவும் எங்களுக்கு இது போன்ற சோசியல் மீடியாவில் வெளியாகும் தகவல்கள் தெரியாது என்றும் தங்கள் அப்படிப்பட்ட ஆட்கள் இல்லை என்றும் அனைவரும் கடினமாக உழைத்து இந்திய அணிக்கு வெற்றியை கொடுவாருவதில் குறியாக இருப்பதாகவும் பதிலடி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து சாமீபத்தில் ஐபிஎல் போட்டியில் விளையாடுவது குறித்து பேசிய கபில் தேவ் ஐபிஎல் போட்டியில் விளையாடும் போது சிறிய காயமாக இருந்தாலும் விளையாடுகிறீர்கள் ஆனால் நாட்டிற்காக அப்படி விளையாட முடியாது என்றும் ஐபிஎல் போட்டியில் ஏற்படும் காயம் குறித்தும் விமர்சித்து பேசியிருந்தார். அப்படிப்பட்ட நிலையில் தான் கபில் தேவ் தற்போது ரோஹித் சர்மா குறித்தும், உலக கோப்பையில் இந்தியாவின் செயல்பாடு குறித்தும் பேசியிருந்தார்.
அவர் கூறுகையில் “பாஸ்பால் முறை மிகவும் அற்புதமானது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான தொடர் சமீப காலங்களில் நான் பார்த்த சிறந்த தொடர்களில் ஒன்றாகும். கிரிக்கெட்டை அப்படித்தான் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். ரோஹித் சிறந்தவர் தான் . ஆனால் அவர் இன்னும் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும். இங்கிலாந்து போன்ற அணிகள் இப்போது எப்படி விளையாடுகின்றன என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.
இந்த விஷயத்தை இந்தியா மட்டுமல்ல கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளும் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஆட்டத்தில் வெற்றி பெறுவதே அனைத்து அணிகளுக்கும் அதிக முன்னுரிமையாக கொடுத்து விளையாட வேண்டும். டிராவுக்காக விளையாட கூடாது. இந்திய அணியானது முதலில் முதல் நான்கு இடங்களுக்கு (அரை இறுதி) வர வேண்டும். அதற்கு பிறகு தான் அனைத்தும் சாத்தியமாகும்.
அரையிறுதியில் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேவை. மேலும் உங்கள் வழியில் செல்ல விஷயங்கள் தேவை. ஆனால் முதல் நான்கு இடங்களை அடைவதே மிக முக்கியமான விஷயம். எந்தவொரு வீரரின் வாழ்க்கையிலும் காயங்கள் ஒரு பகுதியாகும். ஆனால் இந்தியா கிரிக்கெட்டில் அளவுக்கு அதிகமாக கிரிக்கெட் விளையாடுவதாக உணர்கிறேன். அணிக்கும் அதன் வீரர்களுக்கும் எவ்வளவு கிரிக்கெட் கொடுக்க விரும்புகிறார்கள் என்பதை ஃபிக்சர்ஸ் கமிட்டி தீவிரமாக கவனிக்க வேண்டும் என்றார் கபில் தேவ்.