காயத்துடன் ஐபிஎல் விளையாடுகிறீர்கள், ஆனால் நாட்டுக்காக அப்படி விளையாட முடியாது – இந்தியா வீரர் மீது கபில் தேவ் தாக்கு

இந்தியாவின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான பும்ரா காயம் காரணமாக கடந்த ஒரு ஆண்டு காலமாக போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். மேலும் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் கூட கலந்து கொள்ளாமல் தொடர்ந்து ஓய்வெடுத்து வந்தார். 26 வயதாகும் பும்ரா கடந்த 2016 முதல் சர்வதேச போட்டிகளில்

By ·

இந்தியாவின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான பும்ரா காயம் காரணமாக கடந்த ஒரு ஆண்டு காலமாக போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். மேலும் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் கூட கலந்து கொள்ளாமல் தொடர்ந்து ஓய்வெடுத்து வந்தார். 26 வயதாகும் பும்ரா கடந்த 2016 முதல் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்கு மிக முக்கியமான பந்து வீச்சாளராக இருந்து வருகிறார்.

இவர 60 சர்வதேச டி20 போட்டிகள், 72 ஒருநாள் போட்டிகள் மற்றும் 30 டெஸ்ட் போட்டிகள் என விளையாடி அதில் மொத்தமாக 319 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் கடைசியாக கந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த டி20 போட்டியில் கலந்து கொண்டிருந்தார். அதற்கு பிறகு முதுகில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக வலி ஏற்பட்டது. இதனால் இந்தியாவிற்க்க விளையாடாமல் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது நல்ல குணமாகி இருக்கிறார்.

மேலும் வரும் உலக கோப்பை டெஸ்ட் போட்டியில் இவர் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியில் பும்ரா இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும், அதில் அவர் செயல்பாட்டை பார்த்து விட்டுத்தான் மேலும் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் தான் இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் பும்ரா பற்றி பேசியிருக்கிறார்.

கபில் தேவ் கூறியது :

பும்ராவுக்கு என்ன ஆனது? அவர் மிகவும் நம்பிக்கையுடன் வேலை செய்யத் தொடங்கினார், ஆனால் நமக்காக விளையாட வில்லை என்றால் அவருக்காக நாம் நேரத்தை வீணடித்திருக்கிறோம் என்று அர்த்தம். ரிஷப் பந்த் அவ்வளவு சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் இருந்திருந்தால், நம்முடைய டெஸ்ட் கிரிக்கெட் சிறப்பாக இருந்திருக்கும் என்றார் கபில் தேவ்.

கடவுள் என் மீது கருணையுள்ளவர் அதனால் எனக்கு காயம் ஏற்பட்டதில்லை. ஆனால் இன்று வீரர்கள் ஒரு வருடத்தில் 10 மாதங்கள் விளையாடுகிறார்கள். அதனால் எல்லோரும் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டும். ஐபிஎல் ஒரு பெரிய விஷயம் தான். கொஞ்சம் காயங்கள் மற்றும் நீங்கள் ஐபிஎல்லில் விளையாடுவீர்கள். ஆனால் அந்த காயமே உங்களை இந்தியாவுக்காக விளையாட முடியாமல் செய்து விடும். அந்த மாதிரியான சமயங்களில் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். நான் அதைப் பற்றி மிகவும் வெளிப்படையாக இருக்கிறேன் என்றார் கபில் தேவ்.

மேலும் பேசிய அவர் “உங்களுக்கு சிறிய காயம் ஏற்பட்டால், முக்கியமான ஆட்டமாக இருந்தால் ஐபிஎல்லில் விளையாடுவீர்கள். இந்த கட்டத்தில், கிரிக்கெட் வாரியம் அவர்கள் எவ்வளவு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் அடிப்படையான ஒரு விஷயம். இன்று உங்களிடம் வளங்கள் மற்றும் பணம் இருக்கிறது, ஆனால் உங்களிடம் மூன்று அல்லது ஐந்து வருட காலண்டர்கள் இல்லை. இந்த விஷயம் கிரிக்கெட் வாரியத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்றார் கபில் தேவ்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை