ஆர்சிபி அணியில் அதிரடியாக நுழைந்த ஆல்ரவுண்டர் – பலம் வாய்த்த லக்னோ அணிக்கு எதிராக களமிறங்குவாரா?

இந்தியன் பிரீமியர் லீக்கில் 43வது போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணிகளுக்கு இடையே போட்டியானது எகானா ஸ்போர்ட்ஸ் சிட்டியில் நடைபெறுகிறது. இந்த போட்டி லக்னோ அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் பெங்களூரு அணிக்கு மிகவும் முக்கியமான ப

By ·

இந்தியன் பிரீமியர் லீக்கில் 43வது போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணிகளுக்கு இடையே போட்டியானது எகானா ஸ்போர்ட்ஸ் சிட்டியில் நடைபெறுகிறது. இந்த போட்டி லக்னோ அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் பெங்களூரு அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி. ஏனென்றால் 4 வெற்றிகளுடன் இருக்கும் ஆர்சிபி இந்த போட்டியில் அதிக ரன் ரேட்டில் வெற்றிபெற்றால் 4 வது இடத்திற்கு வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் தான் ஒரு பெரிய அறிவிப்பை ஆர்சிபி கொடுத்துள்ளது. அதாவது ஐபிஎல் மற்றும் டீம் இந்தியாவுக்காக விளையாடிய கேதர் ஜாதவ், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக இருந்து வந்தார். ஆனால் தற்போது RCB நிர்வாகம் அவரை தங்களுடைய அணியில் இணைத்துள்ளது. எனினும் டேவிட் வில்லிக்கு பதிலாக அவர் ஏன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது இதுவரை தெரியவில்லை.

ஆனால் கோஹ்லி, பிளசிஸ், மேக்ஸ்வெல் ஆகியோரைத் தவிர வேறு யாரும் ரன் எடுக்காததால் ஆர்சிபி அணி தனது மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சிக்கலில் உள்ளது. பல போட்டிகளை ஆர்சிபியின் தொடக்கம் சரியாக இருந்தாலும் பிறகு அப்படியே பேட்டிங் குறைந்து விடுகிறது. இது அணிக்கு பெரிய ஆபத்து.

இதுவரை நடந்த 8 ஆட்டங்களில் ஷாபாஸ் அகமது, மஹிபால் லோம்ரோர், பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக் போன்றவரகள் போட்டியில் நாடு ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை காட்டாத நிலையில் அணியின் உறுதிதன்மைக்காக கேதார் ஜாதவை எடுத்திருக்கின்றனர் என்ற தகவலும் கிடைதுள்ளது. அனால் இது ரசிகர்களுக்கு திரும்பியளிக்கும் விஷயமாக இல்லை என்பது அவர்களின் சோசியல் மீடியாவில் பிரதிபலிக்கிறது.

ஐபிஎல் 2023 இல் கேதர் ஜாதவ் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. இதனால் ஜாதவ் ஜியோ சினிமாவில் ஐபிஎல் போட்டிகளில் வர்ணனை செய்யத் தொடங்கினார். ஆனால் இப்போது அவர் இந்த சீசனில் RCB க்காக விளையாடுவார். கேதர் ஜாதவ் இதுவரை 93 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 22.14 சராசரியில் 1196 ரன்கள் எடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 123.17 ஆக இருந்தது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை