கரீபியன் விமானத்தில் ஏறுவார் என்று நினைக்கிறேன் – சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பேசிய கெவின் பீட்டர்சன்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் மார்ச் 33 முதல் இந்தியாவில் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும் ராஜஸ்தான் அணியும் லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் மோதியது. இந்த இரண்டு அணிகளும் இதற்க்கு
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் மார்ச் 33 முதல் இந்தியாவில் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும் ராஜஸ்தான் அணியும் லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் மோதியது. இந்த இரண்டு அணிகளும் இதற்க்கு முந்தைய போட்டியில் வற்றி பெற்று இருந்தது.
அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்ன்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அது அவர்களுக்கு சிறப்பாகவே அமைந்தது என்று சொல்லலாம். லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக ஆரம்பித்து இருந்தனர். ஆனால் அதன் பின் லக்னோ அணியின் மிடில் ஆர்டர்ரில் வந்த வீரர்களும் அதே போல் கேப்டன் கே.எல்.ராகுலும் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்து இருந்தனர். இருப்பினும் ராஜஸ்தான் அணியின் சிறப்பான ஆட்டத்தால் அவர்கள் எளிதாக வெறி பெற்று விட்டனர்.
20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை அடித்து இருந்தது. இதில் தொடக்க வீரர் டி காக் எட்டு ரன்களும் அதன் பின் வந்த ஸ்டோனிஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தையே அளித்து இருந்தனர். இதில் அதிக பட்சமாக கே.எல்ராகுல் 76 ரன்களும் தீபக் ஹூடா 50 ரன்களையும் அடித்து இருந்தார். ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் சார்பில் சந்தீப் ஷர்மா இரண்டு விக்கெட்டுகளையும் போல்ட், அவேஷ் கான் மற்றும் அஷ்வின் தலா ஒரு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தனர்.
அதன் பின் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த இலக்கை 19 வது ஓவர்கள் முடிவிலேயே எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.இதில் கேப்டன் பொறுப்பிற்கு ஏற்றார் போல் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி இருந்தார். அதில் அதிகபட்சமாக சஞ்சு சம்சன் 71 ரன்களும் ஜுரேல் 52 ரன்களையும் அடித்து இருந்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் அற்புதமாக விளையாடிய ராஜஸ்தான் அணியின் வீரர் சஞ்சு சாம்சன் குறித்து பேசியுள்ளார் முன்னாள் இங்கிலாந்து கூறுகையில் : சஞ்சு சாம்சன் உலக கோப்பைக்கு போக வேண்டும். இரண்டு வாரங்களில் அவர் கரீபியன் மற்றும் அமெரிக்காவிற்கு இந்திய வீரர்கள் செல்லும் அந்த விமானத்தில் இருக்க வேண்டும் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் கெவின் பீட்டர்சன்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் ஒரு கேப்டனாக இருந்தும் அதிக கவுரவங்கள் வழங்கப்படாத நிலையிழும் அழுத்தத்துடன் அவர் நிறைய தன்னுடைய அணிக்காக செய்கிறார். அவர் ரன்கள் எடுக்கும் விதம் மற்றும் அவர் பேட்டிங் செய்யும் சூழ்நிலை நன்மபமுடியாத்து நான் தேர்வாளராக இருந்தால் சஞ்சு சாம்சனை முதல் தேர்வாக இருப்பார் என்றார் கெவின் பீட்டர்சன்.