ஹர்திக் பாண்டியா மகிழ்ச்சியாக இருப்பது போல நடிக்கிறார்.. ஆனால் நிலைமையே வேறு – கெவின் பீட்டர்சன்
நேற்று நடந்த போட்டியில் இதடாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அது அவர்களுக்கு ஆரம்பத்தில் சில ஓவர்களில் மட்டுமே கை கொடுத்தது என்று சொல்லலாம் அதன் பின்பு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் உடன் இணைந்து துபேவும் சென்னை அணிக்கு ரண்களை
நேற்று நடந்த போட்டியில் இதடாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அது அவர்களுக்கு ஆரம்பத்தில் சில ஓவர்களில் மட்டுமே கை கொடுத்தது என்று சொல்லலாம் அதன் பின்பு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் உடன் இணைந்து துபேவும் சென்னை அணிக்கு ரண்களை குவித்து வந்தனர். அதன் பின் இறுதியாக வந்த சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தல தோனியும் அவரது பங்கிற்கு கடைசி நான்கு பந்தில் 20 ரன்களை அடித்தார். அவர் குவித்திருந்தார் மும்பை அணி ஆரம்பத்தில் பவர் பிளேவில் சிறப்பாக பந்து வீசினார்கள் ஆனால் அதன்பின் அவர்களால் சிறப்பாக ஜொலிக்க முடியவில்லை ஹர்திக் பாண்டியாவும் அதிக ரன்களை வாரி கொடுத்து இருந்தார்.
எனவே சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து206 ரன்களை குவித்தது. ரஹானே ஆரம்பத்தில் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற அதன் பின் ரச்சின் உடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து இருந்தார். அதன் பின் ருதுராஜ் சிறப்பாக அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 69 ரன்களை குவித்து இருந்தார் அதில் 5 சிக்சரும் 5 பவுண்டரிகளும் அடங்கும். ஆனால் அதன் பின் வந்த மிட்சல் சற்று நிதனகமாக விளையாடஅணிக்கு அந்த நேரத்தில் ரன்கள் பெரிய அளவில் வரவில்லை.
பின்னர் களமிறங்கிய தோனி 20வது ஓவரில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி 4 பந்துகளில். 6,6,6,2 என அந்த ஓவரை சிறப்பாக அடித்து இருப்பார். இது மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணியாக இருந்தது என்று சொல்லலாம், மேலும் தோனி 20 ரன்கள் அடிக்க சென்னை அணியும் 20 ரன்களை வித்தியாசத்தில் வென்றதினால் மும்பை அணியின் இடஙக தோல்விக்கு ஹர்திக் பாண்டியாதான் காரணம் என்று ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்சன்கள்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவிற்கு தற்போது இருக்கும் மனநிலை குறித்து பேசியுள்ளார் கெவின் பீட்டர்சன். அவர் கூறுகையில் : இந்த போட்டியில் இருந்த விலகிய அனைத்தும் ஹர்திக் பாண்டியனை பாதிக்கிறது என்று நான் நினைக்கிறேன். அவர் டாஸ் போடும் போது அதிகமாகச் சிரிக்கிறார். அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை போல நடிக்க முயற்சி செய்கிறார். ஆனால் அவர் மகிழ்ச்சியாக இல்லை. அந்த மாதிரியான சூழ்நிலையில் நானும் இருந்திருக்கிறேன். நான் துப்பாக்கி சூடு வரிசையில் இருந்தேன். எனவே எனக்கு தெரியும். அது கண்டிப்பாக ஹர்திக் பாண்டியாவை பாதிக்கிறார்த்து.
ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு மோசமாக கூச்சலிடுவதும், சென்னை அணியின் முன்னாள் கேப்டன் சிங்கம் அவரின் பந்துகளை நாலாபுறமும் அடித்து நொறுக்குவதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். அது உங்களை கண்டிப்பாக பாதிக்கும். ஏனென்றால் அவருக்கு உணர்ச்சிகள் உள்ளன. அவர் ஒரு இந்திய வீரர். அவரை இப்படி நடத்த தேவையில்லை. எனவே, இது அவரைப் பாதிக்கிறது. அது அவரது கிரிக்கெட்டைப் பாதிக்கிறது என்றார் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்.