ஹர்டிக் பாண்டியனை எல்லாரும் ஒருநாள் பாராட்ட போறீங்க.. அத பார்க்கத்தான் போறேன் – சவால் விட்ட கிரண் பொல்லார்ட்.
நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அது அவர்களுக்கு ஆரம்பத்தில் சில ஓவர்களில் மட்டுமே கை கொடுத்தது என்று சொல்லலாம் அதன் பின்பு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் உடன் இணைந்து துபேவும் சென்னை அணிக்கு ரண்களை க
நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அது அவர்களுக்கு ஆரம்பத்தில் சில ஓவர்களில் மட்டுமே கை கொடுத்தது என்று சொல்லலாம் அதன் பின்பு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் உடன் இணைந்து துபேவும் சென்னை அணிக்கு ரண்களை குவித்து வந்தனர். அதன் பின் இறுதியாக வந்த சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தல தோனியும் அவரது பங்கிற்கு கடைசி நான்கு பந்தில் 20 ரன்களை அடித்தார்.
தோனி குவித்திருந்தார் மும்பை அணி ஆரம்பத்தில் பவர் பிளேவில் சிறப்பாக பந்து வீசினார்கள் ஆனால் அதன்பின் அவர்களால் சிறப்பாக ஜொலிக்க முடியவில்லை ஹர்திக் பாண்டியாவும் அதிக ரன்களை வாரி கொடுத்து இருந்தார். எனவே சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து206 ரன்களை குவித்தது. ரஹானே ஆரம்பத்தில் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற அதன் பின் ரச்சின் உடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து இருந்தார்.
அதன் பின் ருதுராஜ் சிறப்பாக அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 69 ரன்களை குவித்து இருந்தார் அதில் 5 சிக்சரும் 5 பவுண்டரிகளும் அடங்கும். இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கம் சிற்பபாக இருந்தது. ரோஹித் சர்மாவும் ஆட்டமிழக்காமல் விளையாடி கொண்டிருந்தார். ஆனால் ஒருகட்டத்தில் இஷான் கிஷான் விக்கெட் விழுக அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மேலும் கேப்டன் ஹர்திக் பந்தியாவும் ஆறு பந்துகளை 2 ரன்களை மட்டுமே நடித்திருந்தார். இறுதியில் மும்பை அணி 30 ரங்களுக்கு தோல்வியை தழுவியது.
இந்நிலையில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி 4 பந்துகளில். 6,6,6,2 என அந்த ஓவரை சிறப்பாக அடித்து இருப்பார். இது மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணியாக இருந்தது என்று சொல்லலாம், மேலும் தோனி 20 ரன்கள் அடிக்க சென்னை அணியும் 20 ரன்களை வித்தியாசத்தில் வென்றதினால் மும்பை அணியின் இந்த தோல்விக்கு ஹர்திக் பாண்டியாதான் காரணம் என்று ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்சன்கள். போட்டி முடிந்து பேசிய மும்பை அணியின் கிரண் பொல்லார்ட் விமர்சகர்களுக்கு சரியான பதிலடி கொடுத்திருந்தார்.
அவர் பேசுகையில் : ஹர்திக் சிறந்து விளங்கும் போது, அனைவரும் அவரைப் புகழ்ந்து பாடுவதை நான் திரும்பி உட்கார்ந்து பார்ப்பேன் என்று என் இதயத்தின் ஆழத்தில் நான் நம்புகிறேன். தற்போது நடக்கும் விஷயம் அவருடைய நம்பிக்கையைப் பாதிக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் ஒரு தன்னம்பிக்கை கொண்ட வீரர். தனது திறமையை மேம்படுத்துவதற்காக கடுமையாக உழைக்கும் ஒருவர் ஹர்திக் பாண்டியா. கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய உங்களுக்கு சில நேரங்களில் நல்ல நாட்களும் சில நேரங்களில் கெட்ட நாட்களும் உள்ளன.
ஒரு தனிநபரை குறிவைத்து பேசுவது என்பது நியாயமில்லாத ஓன்று. கிரிக்கெட் என்பது ஒரு தனி நபர் விளையாட்டு கிடையாது. அது நாள் முடிவில் ஒரு குழு விளையாட்டு. இன்னும் ஆறு வாரங்களில் இந்திய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போகிற ஒரு தனிநபர் ஹர்திக் பாண்டியா. அனைவரும் அவரை உற்சாகப்படுத்த வேண்டும். அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் விரும்புகிறோம். அவர் இந்தியா உருவாக்கியா மிகச்சிறந்த ஆல்ரவுண்டர், அவரால் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் அஸ்த முடியும் என்றார் கிரண் பொல்லார்ட்.