எதிர்காலத்தில் தோனி அல்லது யுவராஜ் சிங்கை போல வருவார் – இளம் வீரருக்கு ஆதரவாக பேசிய கிரண் மோர்.
அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது 3 டி20 தொடரில் பங்கேற்று விளையாடி நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் ஜஸ்பிரீத் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வரும் 2024 டி20 உ
அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது 3 டி20 தொடரில் பங்கேற்று விளையாடி நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் ஜஸ்பிரீத் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வரும் 2024 டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியானது தயாராக இருக்கும் பொருட்டு பல இளம் வீரர்களுக்கும் இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அப்படி இந்த தொடரின் மூலம் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள வீரர் தான் ரிங்கு சிங். உத்தர பிரதேசத்தை சேர்ந்த அவர் சிலிண்டர் விற்பவரின் மகனாக சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடின உழைப்பின் மூலமும் கிரிக்கெட்டின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாககும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி 2018 முதல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் பெஞ்சில் அமர்ந்து வந்தார்.
ஆனால் இவருக்கு வாய்ப்பு கொஞ்சமே கொடுக்கப்பட்ட நிலையில் சின்ஹா வருடத்தில் அவர் ஆடிய ஒரு ஆட்டம் அவ்ருடைய கிரிக்கெட் வாழ்க்கையே மொத்தமாக மாற்றியது என்று சொல்லலாம். ஏனென்றால் கடந்த 2022 ஐபிஎல் சாம்பியனாக இருந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஒரே ஓவரில் 5 சிஸ்சர்களை விளாசினார். அதற்கு பிறகு அவருக்கு அதிகமாக வாய்ப்பு வழங்கப்பட்டது.
மேலும் இந்த ஆட்டத்தின் மூலம் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட ரிங்கு சிங் இந்த வருடம் முழுமையான 14 போட்டிகளில் வாய்ப்பு பெற்று 416 ரன்களை 145.45 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தார். இந்நிலையில் தான் இவரது கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும் வகையில் அயர்லாந்திற்கு எதிரான டி20 தொடரிலும், ஆசியா விளையாட்டு போட்டியில் விளையாடும் இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கிரண் மோர் ரிங்கு சிங் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில்” இந்திய அணியில் அவருடைய வாய்ப்புக்காக நான் காத்திருந்தேன். குறிப்பாக 5, 6 ஆகிய பேட்டிங் இடங்களில் அவரால் சிறப்பாக செயல்பட்டு தம்முடைய கேரியரின் முடிவில் சிறந்த ஃபினிஷராக உருவெடுக்க முடியும். அந்த இடங்களில் யுவராஜ் சிங் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் வெற்றிகரமாக செயல்பட்டதை நாம் பார்த்தோம். ஆனால் அதன் பின் நமக்கு அவர்களைப் போன்ற வீரர்கள் இது வரை கிடைக்கவில்லை”
அவர்களைப் போன்ற வீரர்களை உருவாக்க முயற்சித்தும் நமக்கு வெற்றியும் கிடைக்கவில்லை. இருப்பினும் தற்போதைய நிலைமையில் அந்த இடத்தில் அசத்துவதற்கு திலக் வர்மாவும் வந்துள்ளார். மேலும் ரிங்கு சிங் சிறந்த ஃபீல்டராகவும் செயல்படும் திறமையை கொண்டவர். நீண்ட காலமாக உள்ளூர் கிரிக்கெட்டில் பார்த்து வரும் எனக்கு அவர் தற்போது நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளதாக தோன்றுகிறது” எனக் கூறினார்.