இஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரை மட்டும் தண்டிக்க கூடாது. கோலியும் ரோஹித்தும் ரஞ்சி ட்ராபியில் விளையாட வேண்டும் – முன்னாள் இந்திய வீரர் ஆவேசம்

இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரும் செய்தி என்றால் அது இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர்கள் சம்பளம் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டது தான் பிசிசிஐ நேற்று மத்திய ஒப்பந்தம் 2023 மற்றும் 2024 காண பெயர்களை வெளியிட்டது. அதில் சில முக்கிய வீரர்களின் பெயர்களை மத்திய ஒப

By ·

இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரும் செய்தி என்றால் அது இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர்கள் சம்பளம் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டது தான் பிசிசிஐ நேற்று மத்திய ஒப்பந்தம் 2023 மற்றும் 2024 காண பெயர்களை வெளியிட்டது. அதில் சில முக்கிய வீரர்களின் பெயர்களை மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நிக்கியது தான். அதில் குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் பெயர்கள் தான் மிகவும் பேசப்பட்டு வந்தாலும் அதற்கு அடுத்தபடியாக சாஹல் புஜாரா ஷிகர் தவான் உமேஷ் யாதவ் ஆகியோரின் பெயர்களும் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இஷான் கிஷான் தென் ஆப்பிரிக்கா எதிரான டெஸ்ட் தொடரின் போது மன சோர்வு காரணமாக அணியிலிருந்து விலகினார். ஆனால் அதன் பின்னர் அவர் ரஞ்சி டிராபியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடாமல் ஐபிஎல் 2024 பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதற்கு பிசிசிஐ எப்போது ஒரு எச்சரிக்கை ஒன்றையும் அளித்து இருந்தது. ரஞ்சி ட்ரோபியில் விளையாட வேண்டும் என்றும் கூறியிருந்தது. இஷான் கிஷன் அதனை சற்றும் மதிக்காமல் அவ்வாறு தொடர் ஐபிஎல்காக பயிற்சி மேற்கொண்டு வந்திருந்தார்.

இது குறித்து கீர்த்தி ஆசாத் கூறுகையில் “இது ஒரு நல்ல நடவடிக்கை. அனைவரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டை விளையாட வேண்டும், ஆனால் தற்போது ஐபிஎல்க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இது நல்லது, இது பொழுதுபோக்கு, ஆனால் உண்மையான கிரிக்கெட் (ஐந்து நாட்கள்) கிரிக்கெட் ஆகும். உள்நாட்டு கிரிக்கெட் நல்லது, அது உங்களை தொடர்பில் வைத்திருக்கிறது. ஆனால் நீங்கள் எப்போது ஓய்வு பெற்றாலும், நீங்கள் ஒரு ரோஹித் சர்மா அல்லது விராட் கோலியாக இருந்தாலும், நீங்கள் திரும்பி சென்று மாநிலத்திற்காக உள்நாட்டு கிரிக்கெட்டை விளையாட வேண்டும்,” என்று ஆசாத் கூறினார்.

இருவரையும் (ஐயர் மற்றும் கிஷன்) தண்டிப்பது மட்டும் சரியல்ல, எல்லாரையும் தண்டிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அனைவரையும் ஒரே கண்ணாடியில் பார்க்க வேண்டும். எனது கேள்வி என்னவென்றால், அவர்கள் போதுமான உள்நாட்டு கிரிக்கெட்டை விளையாடுகிறார்களா? அவர்கள் டி20 கிரிக்கெட் விளையாடுகிறார்கள், இப்போதெல்லாம் மற்ற எல்லா மாநிலங்களிலும் டி20 கிரிக்கெட் லீக் உள்ளது. நாங்கள் எங்கள் வாழ்க்கையைத் தொடங்கிய நாட்களில், பிஷன் சிங் பேடி, மதன் லால், சுரிந்தர் போன்ற வீரர்கள். அமர்நாத், மொகிந்தர் அமர்நாத், சேத்தன் சௌஹான், சுனில் கவாஸ்கர், சந்தீப் பாட்டீல், கர்சன் கவ்ரி, நான் மற்றும் ரவி சாஸ்திரி போன்ற இளைஞர்களுடன் இணைந்து விளையாடினோம்.

இப்போதெல்லாம் இளைஞர்களிடம் காணவில்லை. கவுண்டி கிரிக்கெட்டைப் பாருங்கள்; 20-க்கும் மேற்பட்ட கவுண்டிகள் உள்ளன, மேலும் டி20 கிரிக்கெட்டுடன் ஏராளமான மூன்று நாள் மற்றும் நான்கு நாள் ஆட்டங்கள் உள்ளன, ஆனால் ஒவ்வொரு வீரரும் அதில் ஈடுபட்டுள்ளனர். ஒரு வீரர் வெளியேறினால் டெஸ்ட் அணியில், பின்னர் அவர் தனது கவுண்டிக்காக விளையாடத் திரும்புகிறார். அப்படியானால், அந்த உள்நாட்டுப் போட்டிகளில் ஏன் எங்கள் வீரர்களை விளையாட வைக்க முடியாது என்பது பெரிய கேள்வி,” என்றும் அவர் மேலும் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை